சி.பி.எஸ்.இ. 10ம் வகுப்பு மற்றும் 12ம் வகுப்பு பொதுத் தேர்வுகள் மார்ச் 1-ம்தேதி தொடங்கி நடைபெறும் என அறிவிக்கப்பட்டிருந்தது.
அதேசமயம் உத்தரபிரதேசம், பஞ்சாப், உத்தரகாண்ட், கோவா மற்றும் மணிப்பூர் ஆகிய 5 மாநில சட்டசபைகளுக்கு பிப்ரவரி 4-ந்தேதி முதல் மார்ச் 8-ந்தேதி வரை தேர்தல் நடைபெற உள்ளது. தேர்தல் நடைபெறும் காலத்தில் சி.பி.எஸ்.இ. பொதுத்தேர்வு தொடங்க உள்ளதால் தற்போது தேர்வு ஒரு வாரத்திற்கு தள்ளி வைக்கப்பட்டுள்ளது.
சி.பி.எஸ்.இ. 10-ம் வகுப்பு மற்றும் 12-ம் வகுப்பு பொதுத் தேர்வுகள், தேர்தல் முடிந்த மறுநாள் அதாவது மார்ச் 9-ம் தேதி தொடங்கும் என சி.பி.எஸ்.இ. அறிவித்துள்ளது. 10ம் வகுப்பு பொதுத்தேர்வுகள் ஏப்ரல் 10-ம்தேதியும், 12-ம் வகுப்பு பொதுத்தேர்வுகள் ஏப்ரல் 29-ம் தேதியும் முடிவடைகிறது.
10-ம் வகுப்பு தேர்வுகளை நாடு முழுவதும் 1667573 மாணவ-மாணவிகள் எழுதுகின்றனர். 12-ம் வகுப்பு பொதுத்தேர்வுகளை 1098420 பேர் எழுத உள்ளனர்.
தேர்வுகளை ஒருவாரம் தள்ளி வைக்கப்பட்டிருப்பதால் மாணவர்கள் இடையூறுகள் எதுவும் இன்றி தேர்வுக்கு தயாராக முடியும் என்றும் சி.பி.எஸ்.இ. தெரிவித்துள்ளது.
No comments:
Post a Comment
குறிப்பு:
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விக்குயிலுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விக்குயில்.