தமிழக பள்ளிக் கல்வி துறையின், அனைவருக்கும் கல்வி இயக்க திட்டத்தில், 16 ஆயிரம் பகுதி நேர சிறப்பாசிரியர்கள், தொகுப்பூதியத்தில், நான்கு
ஆண்டுகளாக பணியாற்றி வருகின்றனர். இவர்கள் பணி நிரந்தரம் கோரி, சென்னை, சேப்பாக்கத்தில், நேற்று ஆர்ப்பாட்டம் நடத்தினர்.
இதற்கு, காலை, 11:00 மணி முதல், 12:00 மணி வரை மட்டுமே அனுமதி வழங்கப்பட்டது. திடீரென, அமைச்சர் பாண்டியராஜன், நேரில் பேச்சு நடத்த வரும் வரை, ஆர்ப்பாட்டம் தொடரும் என, அவர்கள் அறிவித்தனர். அனுமதி நேரத்தை தாண்டி, ஆர்ப்பாட்டம் நடத்தியதால், நுாற்றுக்கணக்கான ஆசிரியர்களை, போலீசார் கைது செய்தனர்.
No comments:
Post a Comment
குறிப்பு:
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விக்குயிலுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விக்குயில்.