WELCOME

Blogger Tips and TricksLatest Tips And TricksBlogger Tricks

KK SCROLL

Saturday, January 28, 2017

ஆசிரியர் தகுதித் தேர்வு: இன்று அறிவிப்பு.


"ஆசிரியர் தகுதித் தேர்வு குறித்த முறையான அறிவிப்பு சனிக்கிழமை வெளியாகும் என பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் மாஃபா க.பாண்டியராஜன் தெரிவித்துள்ளார். ஆண்டுக்கு 2 முறை ஆசிரியர் தகுதித் தேர்வுகள் நடத்தப்பட
வேண்டும் என்பது தேசிய ஆசிரியர் கல்வி கவுன்சில் (என்சிடிஇ) விதிமுறையாகும். ஆனால், தமிழகத்தில் முதலாவது தகுதித் தேர்வு 2012-ஆம் ஆண்டில் ஜூலை, அக்டோபர் மாதங்களிலும், 2013-ஆம் ஆண்டில் ஆகஸ்ட் மாதத்திலும் என 3 தகுதித் தேர்வுகள் நடத்தப்பட்டன. மாற்றுத்திறனாளிகளுக்கென சிறப்பு தகுதித் தேர்வு 2014-ம் ஆண்டு மே மாதம் நடைபெற்றது. இந்த நிலையில், பாண்டியராஜன் கூறுகையில், "ஆசிரியர் தகுதித் தேர்வு வெயிட்டேஜ் மதிப்பெண் தொடர்பாக நடைபெற்று வந்த வழக்கில் தமிழக அரசு வெளியிட்டுள்ள அரசாணை செல்லும் என கடந்த சில மாதங்களுக்கு முன்பு உச்ச நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. இதைத் தொடர்ந்து நிகழாண்டுக்கான ஆசிரியர் தகுதித் தேர்வு ஏப்ரல் 30-ஆம் தேதிக்குள் நடத்தப்படும். இதுகுறித்த அதிகாரப்பூர்வமான அறிவிப்பை ஆசிரியர் தேர்வு வாரியத்தின் தலைவர் விபு நயர் சனிக்கிழமை வெளியிடவுள்ளார் என்றார் அவர்." - ஆசிரியர் தகுதித் தேர்வு: இன்று அறிவிப்பு http://tz.ucweb.com/1_1Zy9M

No comments:

Post a Comment

குறிப்பு:
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விக்குயிலுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.

-அன்புடன் கல்விக்குயில்.