"பள்ளி மாணவர்களின் எதிர்காலத்தை நிர்ணயிக்கும், பிளஸ் 2 பொதுத்தேர்வினை புதுச்சேரி, காரைக்காலில் 15,659 மாணவ,
மாணவியர் இந்த ஆண்டு எதிர்கொள்ள உள்ளனர்.பள்ளி மாணவர்களின் மேற்படிப்பு, எதிர்காலத்தை நிர்ணயிப்பதில் பிளஸ் 2 பொதுத்தேர்வு முக்கிய பங்கு வகிக்கிறது. இதனால் தான், பிளஸ் 2 பொதுத் தேர்வுகளுக்கு மாணவர்களும், பெற்றோரும் அதிக முக்கியத்துவம் கொடுக்கின்றனர்.ஒவ்வொரு ஆண்டும் பிளஸ் 2, பொதுத்தேர்வுகள் மார்ச் மாதம் தொடங்கி, ஏப்ரல் மாதம் முடிவடையும். இந்தாண்டு, பிளஸ் 2 அரசு பொதுத்தேர்வு மார்ச் 2-ம் தேதி தொடங்கி, 31-ம் தேதி முடிவடைகிறது.தினமும் காலை 10.௦௦ மணி முதல் மதியம் 1.15 மணி வரை தேர்வு நடைபெறும். காலை 10.௦௦ மணிக்கு வினாத்தாள் கொடுக்கப்பட்டு, அதை படித்துப் பார்க்க 10 நிமிடம் அவகாசம் அளிக்கப்படும். அதன்பிறகு, 10.10 மணி முதல் 10.15 மணி வரை வினாத்தாள், விடைத்தாளில் உள்ள விவரங்களை மாணவர்கள் சரிபார்த்துக்கொள்ள வேண்டும். 10.15 மணிக்கு தேர்வு தொடங்கி, மதியம் 1.15 மணிக்கு முடிவடையும்.புதுச்சேரி பிராந்தியம்புதுச்சேரி பிராந்தியத்தில் அரசு பள்ளிகளில் பயிலும் ௫,௩௮௩ மாணவ, மாணவியரும், தனியார் பள்ளிகளில் பயிலும் 7,834 மாணவ, மாணவியரும் பிளஸ் 2 தேர்வு எழுதுகின்றனர்.அரசு பள்ளிகளை பொருத்தவரை 2,148 மாணவர்கள், 3,235 மாணவிகள் எழுதுகின்றனர். தனியார் பள்ளிகளில் 4,020 மாணவர்கள், 3,814 மாணவிகள் எழுதுகின்றனர்.காரைக்கால் பிராந்தியம்காரைக்கால் பிராந்தியத்தில் 2,442 மாணவர்கள் பிளஸ் 2 தேர்வினை எதிர் கொள்கின்றனர். அரசு பள்ளிகள் மூலம் 1,551 மாணவ, மாணவியரும், தனியார் பள்ளிகள் மூலம் ௮௯௧ மாணவ, மாணவியரும் பிளஸ் 2 தேர்வினை எதிர் கொள்கின்றனர்.நடப்பாண்டில் கூடுதல்கடந்த ஆண்டு (2016) பிளஸ் 2 பொதுத் தேர்வினை புதுச்சேரி, காரைக்காலில் 14,285 பேர் எழுதினர். இதில், 12,533 மாணவர்கள் தேர்ச்சி பெற்றனர். தேர்ச்சி சதவீதம் 87.74 சதவீதமாகும்.இந்தாண்டு ஒட்டுமொத்தமாக, புதுச்சேரி மாநிலத்தில் ௫௩ அரசுப்பள்ளிகள், ௮௨ தனியார் பள்ளிகளைச் சேர்ந்த 15,659 மாணவ மாணவியர் பிளஸ் 2 தேர்வினை எதிர்கொள்கின்றனர். கடந்தாண்டை காட்டிலும் 1,374 மாணவர்கள் பிளஸ் 2 தேர்வை கூடுதலாக எழுத உள்ளனர்.சாதனையாகுமா?பள்ளிகளில் தேர்ச்சி சதவீதம் கடந்தாண்டு சற்று சறுக்கியது. வினாத்தாள் கடினமாக இருந்ததால், 2015ம் ஆண்டை காட்டிலும் புதுச்சேரி, காரைக்காலில் 0.41 சதவீதம் தேர்ச்சி குறைந்தது. புதுச்சேரி பிராந்தியத்தில் 0.36 சதவீதமும், காரைக்கால் பிராந்தியத்தில் 0.65 சதவீதமும் குறைந்தது.குறிப்பாக, காரைக்கால் அரசு பள்ளிகளில் 3 சதவீத தேர்ச்சி குறைந்தது. இந்தாண்டு இரண்டு பிராந்தியங்களிலும் ஸ்பெஷல் கோச்சிங்குடன் பிளஸ் 2 மாணவ மாணவிகள் களம் இறங்க உள்ளதால், கடந்தாண்டை காட்டிலும் சாதிக்க வாய்ப்பு பிரகாசமாகியுள்ளது.கட்டுப்பாடுகள்:தேர்வு எழுதும் மாணவர்களுக்கான அறிவுரைகள், கட்டுப்பாடுகள் அனைத்தும் ஹால் டிக்கெட்டில் அச்சிடப்பட உள்ளது.*தேர்வு அறைக்குள் மொபைல் எடுத்துவர தடை செய்யப்பட்டுள்ளது. தேர்வுப் பணியில் ஈடுபடும் ஆசிரியர்களும் மொபைல்போன் வைத்திருக்க தடை விதிக்கப்பட்டுள்ளது. மீறி வைத்திருந்தால் கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும்.* தேர்வு எழுதுவோர் துண்டுத்தாள் வைத்திருத்தல், பார்த்து எழுத முயற்சித்தல், பிற மாணவர்களை பார்த்து எழுதுதல், தேர்வு அதிகாரியிடம் முறைகேடாக நடந்து கொள்ளுதல், விடைத்தாளில் தாம் எழுதிய அனைத்து விடைகளையும் தேர்வு எழுதுவோர் தாமே முழுவதுமாக கோடிட்டு அடித்தல், விடைத்தாள் மாற்றம், ஆள்மாறாட்டம் செய்தல் ஆகிய முறைகேடுகளில் ஈடுபட்டால் இரண்டு ஆண்டுக்கு தேர்வு எழுத முடியாத வகையில் நடவடிக்கை எடுக்கப்படும் என்று தேர்வுத்துறை எச்சரித்துள்ளது.---------------------------பாக்ஸ்பிளஸ் 2 தேர்வு அட்டவணைதேர்வு நாள்-----பாடம்மார்ச்-2(வியாழன்)-மொழித்தாள்-1மார்ச்-3(வெள்ளி)-மொழித்தாள்-2மார்ச்-6(திங்கள்)-ஆங்கிலம் முதள் தாள்மார்ச்-7(செவ்வாய்)-ஆங்கிலம் இரண்டாம் தாள்மார்ச்-10(வெள்ளி)-வணிகவியல்,மனையியல், புவியியல்மார்ச்-13(திங்கள்)-வேதியியல்,கணக்குப்பதிவியல்மார்ச்-17(வெள்ளி) -கம்யூனிகேட்டிவ் இங்கிலீஷ், இந்திய கலாசாரம்,கம்ப்யூட்டர் சயின்ஸ், உயிரி வேதியியல், சிறப்பு தமிழ்மார்ச்-21(செவ்வாய்)-இயற்பியல், பொருளாதாரம்மார்ச்-24(வெள்ளி)-அனைத்து தொழிற்கல்வி தியரி பாடங்கள், அரசியல் அறிவியல், நர்சிங்-பொது, புள்ளியியல்மார்ச்-27(திங்கள்)-கணிதம், விலங்கியல், நுண்ணுயிரியல், நியூட்ரிஷன் மற்றும் டையட்டிக்ஸ்மார்ச்-31(வெள்ளி)-உயிரியல், தாவரவியல், வரலாறு, வணிக கணிதம்--------------" - பிளஸ் ௨ பொதுத் தேர்வில் தேர்ச்சி விகிதம் ... அதிகரிக்குமா? புதுச்சேரி, காரைக்காலில் 15,659 பேர் எழுதுகின்றனர் http://tz.ucweb.com/2_Cl44
No comments:
Post a Comment
குறிப்பு:
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விக்குயிலுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விக்குயில்.