"பத்தாம் வகுப்பு தேர்வுக்கான நுழைவுக் கூட அனுமதி சீட்டுக்களை தனித்தேர்வர்கள் இணையதளம் மூலம் பதிவிறக்கம் செய்து
கொள்ளலாம் என அரசு தேர்வுகள் துறை இயக்குநர் வசுந்தராதேவி தெரிவித்துள்ளார்.
இது குறித்து அவர் புதன்கிழமை வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு: இந்தாண்டுக்கான மார்ச்-2017-க்கான பத்தாம் வகுப்பு தேர்வு நடைபெற இருக்கிறது. இத்தேர்வுக்கு ஆன்லைனில் விண்ணப்பித்த தனித்தேர்வர்கள் (பிப்.9) வியாழக்கிழமை முதல் தொடர்ந்து மார்ச் 3-ஆம் தேதி வரையில் www.dge.tn.gov.in என்ற இணையதளத்தின் மூலம் தேர்வுக்கூ ட நுழைவுச்சீட்டுக்களை பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.
பதிவிறக்கம்....: குறிப்பிட்டுள்ள இணையதளத்துக்குச் சென்று முதலில் HALL TICKET DOWNLOAD என்ற வாசகத்தினை கிளிக் செய்து தோன்றும் பக்கத்தில் உள்ள SSLC EXAM MARCH 2017-PRIVATE CANDIDATE-HALL TICKET PRINTOUT கிளிக் செய்ய வேண்டும். அதைத் தொடர்ந்து விண்ணப்ப எண் மற்றும் பிறந்த தேதியினைப் பதிவு செய்தால், அவர்களுக்கான தேர்வுக்கூட அனுமதிச் சீட்டு திரையில் தோன்றும். அந்த அனுமதிச் சீட்டை பதிவிறக்கம் செய்து கொள்ளலாம் என அவர் தெரிவித்துள்ளார்." - பத்தாம் வகுப்பு: தேர்வர்கள் தேர்வுக்கூட அனுமதி சீட்டுக்களை பதிவிறக்கம் செய்யலாம் http://tz.ucweb.com/2_CkWt
No comments:
Post a Comment
குறிப்பு:
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விக்குயிலுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விக்குயில்.