அண்ணாமலை பல்கலைகழகத்தில் விதிமுறையினை மீறி 5இலட்சம் 10 இலட்சம் என வாங்கிகொண்டு பேராசிரியர்களை
நியமித்தார்கள்.அது மட்டுமல்லாமல் 6000 க்கும் அதிகமான ஆசிரியர்களல்லா பணியாளர்களையும் 3இலட்சம் 4 இலட்சம் வாங்கிகொண்டு நியமித்தார்கள்.இதன் விளைவாக இன்று சம்பளம் வழங்குவதில் பல்கலைகழகத்திற்கு பிரச்சினை ( 6 வது ஊதிய உயர்வு அமல்படுத்தியதால் சம்பளம் இருமடங்காகியது) ஏற்பட்டது. இதனால் அண்ணாமலை பல்கலைகழக நிர்வாகத்தினால் சமாளிக்க முடியவில்லை. இதனால் போராட்டம் வெடித்தது. அரசு ஷிவதாஸ் மீனா என்பவரை நியமித்து அறிக்கை பெற்றது.அவரின் அறிக்கையில் முறைகேடாக நியமனம் நடைபெற்றுள்ளது கண்டறியப் பட்டுள்ளது. முறைகேடாக நியமித்தவர்களை டிஸ்மிஸ் செய்து இருக்க வேண்டும். ஆனால் உயர்கல்வி துறை அதிகாரிகள் மற்றும் அப்போதைய உயர்கல்வி அமைச்சர் ஆலோசனையால் பல கோடி ரூபாய் கொள்ளையடிக்கும் திட்டம் தீட்டியது. இதற்காக தமிழக அரசு அண்ணாமலை பல்கலைகழகத்தை அரசு பல்கலைகழகமாக மாற்ற சில கோடிகளை வாங்கிகொண்டு அரசு பல்கலைகழகமாக மாற்றி ஆணை பிறப்பித்தது.கடந்த 2016 ல் அரசு கல்லூரிக்கு 367 பேராசிரியர்களை பணிநிரவலில் அனுப்பி ரிகர்சல்(ஒத்திகை) பார்த்தது.அப்பொழுது தமிழ்நாடு தமிழ்நாடு அரசு கல்லூரி பேராசிரியர்கள் சங்கங்கள்,ஆசிரியர் மன்றம் போன்ற அமைப்புகள் கண்துடைப்புக்கு உள்ளிருப்பு போராட்டம் நடத்தியது. ஏனெனில் அரசு அவர்களுக்கு பென்சன் மற்றும் இன்கிரிமன்ட் போன்ற சலுகையை தருகிறோம் நீங்கள் அழுத்தம் கொடுக்காதீர்கள் எனக் கேட்டு கொண்டது. இதனால் தான் தமிழ்நாடு பேராசிரியர் அமைப்பு மற்றும் மன்றம் போன்ற அமைப்புகள் வழக்கு தொடரவில்லையாம்.மேலும் கொஞ்சபணம் சங்க நிர்வாகிகளுக்கு கையூட்டாக தரப்பட்டதென தகவல் கசிந்தது. பணிநிரவல் பேரத்துடன் முடிக்கப்பட்டது. விரும்பிய இடத்திற்கு செல்ல 3 இலட்சம் வரை இலஞ்சம். அதற்காக ஒவ்வொரு டீம் லீடர் உள்ளார்களாம். கௌரவ விரிவுரையாளர்களுக்கும் உங்களுக்கு சம்பளம் 5000 கூட்டி கொடுக்கிறோம் போராட்டம் வேண்டாம்.பணிநிரவலால் பாதிப்பு அடைந்தவர்களுக்கு வேறு கல்லூரியில் பணி வழங்குகிறோம். மேலும் இனிமேல் பணிநிரவல் செய்யமாட்டோம் என வாக்குறுதியை கல்லூரி கல்வி இயக்குனர் அள்ளி வீசினார். ஆனால் பணிநிரவலால் பாதிக்கப்பட்ட கௌரவ விரிவுரையாளர்களில் 20% க்கும் மட்டுமே பணி கிடைத்தது. அந்த நாடகங்கள் எல்லாம் வெற்றியாக முடிந்தது. பிறகு அண்ணாமலை பல்கலை பேராசிரியர்களின் பணி பதிவேட்டினை நைசாக அந்தந்த கல்லூரிக்கு அனுப்பியது. பீதியில் மனகுமுறலுடன் நிரந்தர பேராசிரியர்கள் இருந்தார்கள். இப்பொழுது அண்ணாமலை பல்கலைகழகத்தில் உபரியாக உள்ள 1080 பேராசியர்களில் சுமார் 190 பேராசிரியர்களை அரசு கல்லூரிக்கும் மீதமுள்ளவர்களை பாலிடெக்னிக் ,இன்ஜினியரிங் கல்லூரி போன்ற கல்லூரிகளுக்கும் மீண்டும் அனுப்ப முடிவு செய்துள்ளது.இப்பொழுது நிரந்த பேராசிரியர்கள் மற்றும் கௌரவ விரிவுரையாளர்கள் குமுறலை உள்ளிருப்பு போராட்டமாக நடத்தினார்கள் . உடனே அரசு தலையிட்டு அரசு கொள்கை முடிவு எடுத்துள்ளது( இந்த பணிநிரவல் செய்ய இலஞ்சம் பெறப்பட்டுள்ளது). எனவே நிரந்தர பேராசிரியர்களாகிய உங்களுக்கு சில அட்ஜெஸ்ட்மென்ட் செய்து தருகிறோம்.அதாவது அண்ணாமலை பல்கலை கழக பேராசிரியர்களின் பணிபதிவேடு மீண்டும் பல்கலைகழகத்திற்கே திருப்பி அனுப்புவிடுகிறோம்.மேலும் அவர்களின் பணி அனுபவத்தால் ஒரு சிலர்கள் chief examiner ஆவது, மண்டல இணை இயக்குனர் மற்றும் முதல்வர் ஆவது பாதிக்கப் படாமல் இருப்பதற்கு கல்லூரி கல்வி இயக்குனரகம் சார்பில் உத்தரவாதம் அளிக்கிறோம் என கூறியது.எனவே தமிழ்நாடு அரசு கல்லூரி பேராசிரியர்கள் மற்றும் மன்ற அமைப்புகள் ஜகா வாங்கி விட்டார்கள். இப்பொழுது அப்பாவி கௌரவ விரிவுரையாளர்கள் மட்டுமே பாதிக்க பட்டு உள்ளனர். இவர்களின் போராட்டத்துக்கும் 25ஆயிரம் ஊதியமாக தருவோம் அதுவும் நாங்கள் பணிநிரவல் செய்து முடிக்கும் வரை போராட்டம் செய்யாமல் இருந்தால் மட்டுமே வழங்க இயலுமாம். இதனால் இலஞ்சம் தலை விரித்தாடும். ஏற்கனவே 367 பேரிலே 120 க்கும் அதிகமானவர்கள் போலிசான்றிதழ்கள் வைத்தவர்களை தண்டிக்காமல் தூங்கும் அரசு.இப்பொழுது 1080 பேர் வர உள்ளனர்.இதில் எவ்வளவு போலி சான்றோ கடவுளுக்கே வெளிச்சம். இவ்வளவு ஊழல் தைரியமாக நடக்கிறது. மத்திய அரசும் (MHRD)கையைகட்டிக் கொண்டு கண்ணை மூடிக்கொண்டு குரட்டைவிட்டு ஆழ்ந்த தூக்கத்தில் உள்ளது. உயர்திரு முதல்வர் பன்னீர்செல்வம் அவர்களாவது இதனை கவனத்தில் கொள்ளுவாரா எனத் தெரியவில்லை.
No comments:
Post a Comment
குறிப்பு:
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விக்குயிலுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விக்குயில்.