பேராசிரியர் நியமனத்தில் நிறைய முறைகேடுகளை அண்ணாமலை பல்கலை கழகம் நடத்தியுள்ளது.உதாரணமாக 10 -ம் வகுப்பு முடித்துவிட்டு 11&12 -ம் வகுப்பு படிக்காமல் நேரடியாக தொலைதூரகல்வி முறை மூலம் பட்டம் பெற்றவர்களை பணி அமர்த்தியுள்ளது. மாணவர்களின் சேர்க்கைக்காக புதிய பாடப்பிரிவுகளை துவக்காமல் பேராசிரியர் பணியிடங்களை நிரப்புவதற்காகவே துவக்கியதால் தற்போது சில துறைகளில் மாணவர்களை விட பேராசிரியர்களின் எண்ணிக்கை அதிகம் உள்ளது. எனவே தான் 1080 பேராசிரியர்கள் மற்றும் 4722 ஆசிரியர் அல்லா பணியாளர்கள் மிகையாக உள்ளனர். பாடம் நடத்தாமல் வேலை செய்யாதவர்களான மேற்கண்டவர்களுக்கு வருடத்திற்கு 600 கோடி வரை சம்பளமாக வழங்கப்படுகிறது. எனவே பேராசிரியர் நியமனங்கள் மற்றும் அவர்களின் சான்றிதழ்களின் உண்மைதன்மை சம்பந்தமாக சி.பி.ஐ விசாரனைக்கு உத்தரவிட வேண்டும் என தமிழ்நாடு செட் நெட் விரிவுரையாளர் அமைப்பு கோரிக்கை விடுத்துள்ளது.
No comments:
Post a Comment
குறிப்பு:
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விக்குயிலுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விக்குயில்.