Saturday, March 11, 2017
சி.பி.எஸ்.இ., 10ம் வகுப்பு பொது தேர்வு முறையில் மாற்றம்.
மத்திய இடைநிலை கல்வி வாரியமான, சி.பி.எஸ்.இ.,யின், 10ம் வகுப்பு மாணவர்களுக்கான, பொதுத் தேர்வு முறையில் மாற்றம் கொண்டு வரப்படுகிறது. சி.பி.எஸ்.இ., 10ம் வகுப்பு மாணவர்களுக்கு, பள்ளி அளவிலும், தேசிய அளவிலும், தனித்தனி தேர்வுகள் நடத்தப்படுகின்றன. மாணவர்கள், ஏதாவது ஒருமுறையில், ஆண்டு இறுதி தேர்வை எழுத வேண்டும். இதில், பல்வேறு குழப்பங்கள் ஏற்பட்டதால், வரும் ஆண்டு முதல், பள்ளி அளவிலான தேர்வு ரத்து செய்யப்பட்டு, அனைவருக்கும் பொதுத் தேர்வு கட்டாயமாகிறது. இந்நிலையில், இத்தேர்வு முறையில் உள்ள அகமதிப்பீடு முறையும் மாற்றப்படுவதாக, சி.பி.எஸ்.இ., அறிவித்துள்ளது. இதன்படி, 10ம் வகுப்பு மாணவர்கள், தமிழ், ஆங்கிலம், கணிதம், அறிவியல், சமூக அறிவியல் பாடங்களுக்கு மட்டுமின்றி, தொழிற்கல்வி பாடம் ஒன்றுக்கும் சேர்த்து, தேர்வு எழுத வேண்டும். கணிதம், அறிவியல், சமூக அறிவியலில், ஏதாவது ஒரு பாடத்தில் தேர்ச்சி பெறாவிட்டால், மாணவர்களின் தொழிற்கல்வி மதிப்பெண் கணக்கிடப்பட்டு, தேர்ச்சி பெற்றதாக அறிவிக்கப்படும். இதற்கு விருப்பம் இல்லையேல், மாணவர்கள் தேர்ச்சி பெறாத பாடத்தில், துணை தேர்வு எழுதி கொள்ளலாம் என, சி.பி.எஸ்.இ., தலைவர், ஆர்.கே.சதுர்வேதி அறிவித்துள்ளார்.
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment
குறிப்பு:
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விக்குயிலுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விக்குயில்.