WELCOME

Blogger Tips and TricksLatest Tips And TricksBlogger Tricks

KK SCROLL

Tuesday, March 28, 2017

நீட்' தேர்வுக்கு 11.35 லட்சம் விண்ணப்பம்.


பிளஸ் 2வுக்கு பின், எம்.பி.பி.எஸ்., - பி.டி.எஸ்., போன்ற மருத்துவ படிப்புகளில் சேர, 'நீட்' என்ற தேசிய தகுதி மற்றும் நுழைவு தேர்வில்
தேர்ச்சி பெற வேண்டும்' என, கடந்த ஆண்டு உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டது. தமிழகத்தில், நீட் தேர்வுக்கு விலக்கு கேட்டு, சட்டசபையில் மசோதா நிறைவேற்றப்பட்டு, ஜனாதிபதி ஒப்புதலுக்கு அனுப்பப்பட்டுள்ளது. ஆனால், இன்னும் ஒப்புதல் கிடைக்கவில்லை.இந்த ஆண்டு, மே, 7ல் நடக்க உள்ள, நீட் தேர்வில் பங்கேற்க, நாடு முழுவதும், 11.35 லட்சம் பேர் விண்ணப்பித்துள்ளனர். கடந்த ஆண்டு, ௮.௦௫ லட்சம் பேர் மட்டுமே விண்ணப்பித்தனர். கடந்த ஆண்டு, 80 நகரங்களில் தேர்வு மையம் அமைக்கப்பட்டது. இந்த ஆண்டு, 23 புதிய நகரங்கள் சேர்க்கப்பட்டு, 2,200 தேர்வு மையங்கள் அமைக்கப்பட உள்ளன. சென்னை, திருச்சி, மதுரை, கோவை, திருநெல்வேலி, நாமக்கல், வேலுார் மற்றும் சேலம் ஆகிய நகரங்களில், தேர்வு மையங்கள் அமைக்கப்பட உள்ளன.

No comments:

Post a Comment

குறிப்பு:
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விக்குயிலுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.

-அன்புடன் கல்விக்குயில்.