WELCOME

Blogger Tips and TricksLatest Tips And TricksBlogger Tricks

KK SCROLL

Sunday, March 26, 2017

பள்ளிகளில் 'பயோ மெட்ரிக்' வருகைப்பதிவு.

பெரம்பலுார் மாவட்டத்தில், பரிசோதனை அடிப்படையில், பள்ளி களில், மாணவர்கள் மற்றும் ஆசிரியர்களுக்கு, 'பயோ மெட்ரிக்' வருகைப் பதிவேட்டை அறிமுகப்படுத்த, அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது.
மாணவர்கள் மற்றும் ஆசிரியர்களின் வருகைப் பதிவேட்டை கையாள்வதில், தற்போது உள்ள கையெழுத்திடும் நடைமுறையை மாற்றி, புதிய தொழில்நுட்ப உத்தி அடிப்படையில், பயோ மெட்ரிக் வருகைப்பதிவு முறை அறிமுகப்படுத்தப்படும்.
இதற்கு, 45.57 கோடி ரூபாய் செலவு ஏற்படும் என, சட்டசபையில், 2016 ஆக., 23ல், 110 விதியின் கீழ், முதல்வர் அறிவித்தார்.
அதன்படி திட்டத்தை செயல்படுத்த, தமிழக அரசு சார்பில், அரசாணை பிறப்பிக்கப்பட்டுள்ளது. பெரம்பலுார் மாவட்டத்தில், பரிசோதனை அடிப்படையில், இத்திட்டத்தை செயல்படுத்த முடிவு செய்யப்பட்டு உள்ளது.

No comments:

Post a Comment

குறிப்பு:
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விக்குயிலுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.

-அன்புடன் கல்விக்குயில்.