WELCOME

Blogger Tips and TricksLatest Tips And TricksBlogger Tricks

KK SCROLL

Thursday, March 16, 2017

மத்திய அரசு ஊழியர்களுக்கு 2 சதவீத அகவிலைப்படி உயர்வு.


மத்திய அரசு ஊழியர்களுக்கான அகவிலைப்படி, 2 சதவீதம் உயர்த்தப்பட்டுள்ளது. இந்த அகவிலைப்படி உயர்வு, கடந்த ஜனவரி 1-ஆம் தேதி முதல் கணக்கிட்டு வழங்கப்படவிருக்கிறது. தில்லியில் பிரதமர் மோடி
தலைமையில் புதன்கிழமை நடைபெற்ற அமைச்சரவைக் கூட்டத்தில், அதற்கான ஒப்புதல் வழங்கப்பட்டதாக மத்திய அரசு வெளியிட்ட அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. மத்திய அரசு ஊழியர்கள், ஓய்வூதியதாரர்களுக்கு அடிப்படை ஊதியத்தில் 2 சதவீதம் என்ற அளவில் அகவிலைப்படி வழங்கப்பட்டு வந்த நிலையில், தற்போது 4 சதவீதமாக அதிகரிக்கப்பட்டுள்ளது. விலைவாசி உயர்வு மற்றும் 7-ஆவது ஊதியக் குழுவின் பரிந்துரைகளின் அடிப்படையில் உருவாக்கப்பட்ட நடைமுறைகளுக்கு ஏற்ப அகவிலைப்படி உயர்த்தப்பட்டுள்ளது. இந்த நடவடிக்கையால், சுமார் 48.54 லட்சம் மத்திய அரசு ஊழியர்களும், 55.51 லட்சம் ஓய்வூதியதாரர்களும் பயனடைவார்கள். இதன் மூலம் அரசு கருவூலத்துக்கு ஆண்டுக்கு ரூ.5,857 கோடி கூடுதல் செலவாகும் என்று மத்திய அரசின் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. முன்னதாக, மத்திய அரசு ஊழியர்களுக்கு 2 சதவீத அளவுக்கு அகவிலைப்படி உயர்த்தப்படவிருப்பதாக தகவல்கள் வெளியாகின. அப்போது, அன்றாட செலவுகள் அதிகரித்துள்ள நிலையில், இந்த உயர்வு போதாது என்று மத்திய அரசு ஊழியர் சங்கங்கள் தெரிவித்தது குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment

குறிப்பு:
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விக்குயிலுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.

-அன்புடன் கல்விக்குயில்.