WELCOME

Blogger Tips and TricksLatest Tips And TricksBlogger Tricks

KK SCROLL

Tuesday, March 14, 2017

தேசிய நல்லாசிரியர் விருது பெற்ற ஆசிரியர்களுக்கு 2 ஆண்டுகள்  பணி நீட்டிப்பு வழங்க கோரிக்கை.

தேசிய நல்லாசிரியர் விருது பெறும் ஆசிரியர்களுக்கு பணி ஓய்வு பெறும் நாளில் இருந்து சிறப்புச் சலுகையாக 2 ஆண்டுகள் (58 வயதில் இருந்து 60 வயது ஆக)பணி நீட்டிப்பு வழங்க வேண்டும் என்று தமிழ்நாடு மேல்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர்கள் கழகம் கோரிக்கை விடுத்துள்ளது. இது குறித்து தலைமை ஆசிரியர்கள் கழகம் சார்பில் வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில் தலைவர் கே.சந்திரசேகரன் கூறி இருப்பதாவது பஞ்சாப்,ஹிமாசல பிரதேசம்,மணிப்பூர் ஆகிய மாநிலங்களில் தேசிய நல்லாசிரியர் விருது பெற்ற ஆசிரியர்களுக்கு பணி ஓய்வு பெறும் நாளில் இருந்து சிறப்புச் சலுகையாக அவர்களுக்கு 2 ஆண்டுகள் பணி நீட்டிப்பு வழங்க சட்டம் இயற்றி செயல்படுத்தி வருகின்றது. ஆசிரியர்கள் மற்றும் மாணவர்கள் நலனில் மிகுந்த அக்கறை செலுத்தி செயல்பட்டு வரும் தமிழகஅரசும் தேசிய நல்லாசிரியர் விருது பெறும் ஆசிரியர்களைக் கௌரவிக்கும் வகையில் அவர்களுக்கு 2 ஆண்டுகள் பணி நீட்டிப்பு வழங்கி கௌரவிக்க வேண்டுகிறோம். எங்களது இந்த நீண்ட கால கோரிக்கையை பரிசீலனை செய்து நிறைவேற்றித் தருமாறு கேட்டுக் கொள்கிறோம்.

No comments:

Post a Comment

குறிப்பு:
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விக்குயிலுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.

-அன்புடன் கல்விக்குயில்.