WELCOME

Blogger Tips and TricksLatest Tips And TricksBlogger Tricks

KK SCROLL

Saturday, March 25, 2017

3 மாதமாக ஆசிரியர்கள் வராததால் பள்ளிக்கு பூட்டு போட்டு போராட்டம்.

திருவண்ணாமலை மாவட்டம், செய்யாறு அருகே, மூன்று மாதமாக, ஆசிரியர்கள் வராததால், பள்ளிக்கு பூட்டு போட்டு, பெற்றோர்
போராட்டத்தில் ஈடுபட்டனர். திருவண்ணாமலை மாவட்டம், செய்யாறு அருகே சிறுவேளியநல்லுாரில் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி உள்ளது. இப்பள்ளியில், 118 மாணவ, மாணவியர் படிக்கின்றனர். பள்ளி தலைமை ஆசிரியர் காளிதாஸ் உட்பட ஏழு ஆசிரியர்கள் பணிபுரிகின்றனர். பள்ளி தலைமை ஆசிரியர் காளிதாஸ் உட்பட மூன்று ஆசிரியர்கள், கடந்த, மூன்று மாதமாக முறையாக பள்ளிக்கு வரவில்லை. இதனால், மாணவர்கள் சரிவர பள்ளிக்கு செல்லாமல் ஊர் சுற்றி வந்தனர்.இது குறித்து, மாணவர்களிடம், பெற்றோர் விசாரித்தபோது, அங்கு தலைமை ஆசிரியர் சரிவர பள்ளிக்கு வருவதில்லை என தெரிந்தது. உதவி தொடக்க கல்வி அலுவலரிடம் பெற்றோர், பல முறை புகார் அளித்தனர். ஆனால், இதுவரை எவ்வித நடவடிக்கையும் எடுக்கவில்லை. இதனால் ஆத்திரமடைந்த பெற்றோர் மற்றும் பொதுமக்கள், 'தலைமை ஆசிரியர் உள்ளிட்ட, ஏழு பேரும் பள்ளிக்கு வந்தால் தான் பள்ளியை திறப்போம்' என கூறி, பள்ளிக்கு பூட்டு போட்டு, நேற்று காலை, போராட்டத்தில் ஈடுபட்டனர். செய்யாறு உதவி கல்வி அலுவலர், அங்கு வந்து பேச்சு நடத்தினார். பள்ளிக்கு சரிவர வராத ஆசிரியர் மீது துறை ரீதியாக நடவடிக்கை எடுக்கப்படும் என, தெரிவித்தார். இதை ஏற்று, பெற்றோர் கலைந்து சென்றனர். அதன்பின், பள்ளி திறக்கப்பட்டது. இதனால் அங்கு, இரண்டு மணி நேரம் பரபரப்பு ஏற்பட்டது.

No comments:

Post a Comment

குறிப்பு:
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விக்குயிலுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.

-அன்புடன் கல்விக்குயில்.