ஆய்வக உதவியாளர் தேர்வு முடிந்து, இரு ஆண்டுகள் நெருங்கும் நிலையில், தேர்வர்களின் தரவரிசை பட்டியல் தயாரிப்பு பணிகள் துவங்கியுள்ளன. அரசு உயர், மேல்நிலை பள்ளிகளில், 4,362 ஆய்வக உதவியாளர் பணியிடங்களை நிரப்ப, 2015 மே, 31ல் எழுத்துத் தேர்வு நடந்தது; எட்டு லட்சம் பேர் பங்கேற்றனர். எழுத்துத் தேர்வுக்கு பின், 'நேர்முகத் தேர்வில், அதிக மதிப்பெண் பெறுவோருக்கு பணி ஒதுக்கப்படும்' என, தேர்வுத் துறை அறிவித்திருந்தது. ஆனால், 'எழுத்துத் தேர்வு மதிப்பெண்ணையும் சேர்த்து, பணி ஒதுக்கீடு பட்டியல் வெளியிட வேண்டும்' என, உயர் நீதிமன்றம் உத்தரவிட்டது. இப்போது, உயர் நீதிமன்ற உத்தரவுப்படி, தேர்வு முடிவை அறிவிக்க, தேர்வுத் துறைக்கு, அரசு உத்தரவிட்டுள்ளது. எனவே, தேர்வர்களின் மதிப்பெண்படி, நேர்முகத் தேர்வுக்கான தரவரிசை பட்டியல் தயார் செய்யும் பணி துவங்கியுள்ளது.
No comments:
Post a Comment
குறிப்பு:
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விக்குயிலுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விக்குயில்.