Friday, March 24, 2017
போலி சான்றிதழ் களையெடுக்க யு.ஜி.சி., தீவிரம் : மாணவர்களின் ஆதார் எண் இணைக்க உத்தரவு.
போலி சான்றிதழ்கள் பயன்பாட்டை கட்டுப்படுத்தும் வகையில், உயர்கல்வி சான்றிதழ்களில், ஆதார் எண் இணைப்பு உட்பட புதிய அம்சங்களை சேர்க்க பல்கலை, கல்லுாரிகளுக்கு யு.ஜி.சி., உத்தரவிட்டுள்ளது. கடந்த, 2014ம் ஆண்டு மதிப்பெண் பட்டியல் மற்றும் பிற சான்றிதழ்களில் பாதுகாப்பு அம்சங்களை இணைக்க, யு.ஜி.சி., அறிவுறுத்தியது. அதன்படி, அனைத்து சான்றிதழ்களும் தற்போது, ரகசிய பாதுகாப்பு எண்களுடனே அச்சிடப்பட்டு வருகின்றன. இருப்பினும், போலி சான்றிதழ்கள் பயன்பாடு அனைத்துத் துறைகளிலும் பரவலாகியுள்ளது.போலிகளை களையெடுக்கும் வகையில், மாணவர்களின் புகைப்படம், ஆதார் எண், தனிப்பட்ட அடையாள எண் போன்ற புதிய அம்சங்களைச் சேர்க்க பல்கலைகளுக்கு உத்தரவிட்டுள்ளது. மேலும், கல்லுாரியின் பெயர், படித்த பாடப்பிரிவு, முழுநேரம், பகுதி நேரம் அல்லது தொலைதுார முறை ஆகியவற்றை கட்டாயம் குறிப்பிட வேண்டும் என, தெரிவித்துள்ளது. இக்கல்வியாண்டு முதலே புதிய அம்சங்களுடன் சான்றிதழ்களை வினியோகிக்க அறிவுறுத்தியுள்ளது.பாரதியார் பல்கலை தேர்வுக் கட்டுப்பாட்டு அதிகாரி, கிளாடியஸ் லீமா ரோஸ் கூறுகையில்,''யு.ஜி.சி., இணையதளத்தில் தகவல் வெளியிடப்பட்டுள்ளது. அதிகாரப்பூர்வமாக எங்களுக்கு தகவல் வரவில்லை. அதன்பின், உரிய நடவடிக்கை எடுப்போம்,'' என்றார்.
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment
குறிப்பு:
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விக்குயிலுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விக்குயில்.