WELCOME

Blogger Tips and TricksLatest Tips And TricksBlogger Tricks

KK SCROLL

Wednesday, March 8, 2017

டி.என்.பி.எஸ்.சி., தேர்வு கட்டணம் உயர்வு.



அரசு பணியாளர் தேர்வு வாரியமான, டி.என்.பி.எஸ்.சி.,யின் தேர்வு கட்டணம் உயர்த்தப்பட்டுள்ளது.



                              

தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் நடத்தும் தேர்வுகளில், பிற்படுத்தப்பட்டோர், பிற்படுத்தப்பட்ட முஸ்லிம், மிகவும் பிற்படுத் தப்பட்டோர், பட்டம் பெற்றவராக இருந்தால், மூன்று முறை, கட்டணமின்றி, இலவசமாகத்


தேர்வு எழுத அனுமதிக்கப்பட்டது. இனி, பட்டம் பெற்றவர்கள் மட்டுமின்றி, கல்வித் தகுதி எதுவாக இருந்தாலும், மூன்று முறை, இலவச மாகத் தேர்வு எழுத அனுமதிக்க, அரசு உத்தர விட்டுள்ளது. 

அத்துடன் டி.என்.பி.எஸ்.சி., தேர்வுக் கட்டணமும் மாற்றி அமைக்கப்பட்டு உள்ளது. புதிய கட்டணம், மார்ச் 1 முதல் அமலுக்கு வந்துள்ளது.

புதிய கட்டண விபரம்:


* எழுத்து, நேர்முகத் தேர்வு, மாநில அரசுப்பணி தேர்வுக்கான கட்டணம், 125 ரூபாயில் இருந்து, 200 ரூபாயாகஉயர்ந்துள்ளது.

* தமிழ்நாடு சார்பு பணிக்கான தேர்வுக் கட்டணம், 100 ரூபாயிருந்து, 150 ரூபாயாகியுள்ளது.

* நீதித்துறை, தலைமைச் செயலகம், அமைச்சுப் பணிக்கான எழுத்து தேர்வுக் கட்டணம், 75 ரூபாயில்இருந்து, 100 ரூபாயாக அதிகரிக்கப்பட்டு உள்ளது.

* முதல் நிலை தேர்வுக் கட்டணம், 75 ரூபாயில் இருந்து, 100 ரூபாய்; ஐந்து ஆண்டுகள் ஆன் - லைன் பதிவுக்கான கட்டணம், 30 ரூபாயிலி ருந்து, 150 ரூபாயாக கூடியுள்ளது.

No comments:

Post a Comment

குறிப்பு:
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விக்குயிலுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.

-அன்புடன் கல்விக்குயில்.