ஆசிரியர் தகுதித்தேர்வுக்கான விண்ணப்பம் வழங்கும் பணி நேற்று துவங்கியது; விண்ணப்பம் பெற, பட்டதாரிகள் ஆர்வம் காட்டவில்லை.
தமிழகத்தில் ஏப்., 29 மற்றும், 30ல், ஆசிரியர் தகுதித்தேர்வு நடக்கிறது. இதற்கான விண்ணப்பம் வழங்கும் பணி, மாவட்டத்தில் உள்ள, 28 மையங்களில், நேற்று துவங்கியது.
ஒரு விண்ணப்பம், 50 ரூபாய்க்கு விற்கப்படுகிறது.முதல் நாளான நேற்று, விண்ணப்பம் வாங்க, பலரும் ஆர்வம் காட்டவில்லை. பட்டதாரி, இடைநிலை ஆசிரியர்கள், குறைந்த அளவிலேயே வந்திருந்தனர். நூற்றுக்கணக்கான விண்ணப்பங்களே விற்பனையானது.
கல்வித்துறை அதிகாரிகள் கூறுகையில், ‘விண்ணப்பம் திரும்ப வழங்க, 20 நாள் கால அவகாசம் இருப்பதால், முதல் நாளில் யாரும் ஆர்வம் காட்டவில்லை. அடுத்தடுத்த நாளில், விண்ணப்பம் பெறுவோரின் எண்ணிக்கை அதிகரிக்கும்,’ என்றனர்.
No comments:
Post a Comment
குறிப்பு:
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விக்குயிலுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விக்குயில்.