WELCOME

Blogger Tips and TricksLatest Tips And TricksBlogger Tricks

KK SCROLL

Wednesday, May 31, 2017

மாற்றுத்திறனாளிகளுக்கு 4 சதவீத இட ஒதுக்கீடு.


அரசு பணியிடங்களில், மாற்றுத் திறனாளிகளுக்கான, ௩ சதவீத இட ஒதுக்கீட்டை, ௪ சதவீதமாக உயர்த்தி வழங்க, முதல்வர் பழனிசாமி உத்தரவிட்டு உள்ளார். அவரது அறிக்கை:தமிழகத்தில்,
1981ல் இருந்தே, மாற்று திறனாளிகளுக்கு, வேலை வாய்ப்பில், ௩ சதவீதம் இட ஒதுக்கீடு வழங்கப்படுகிறது. அவற்றில், பார்வை குறைபாடு உடையவர், செவித்திறன் குறைபாடு உள்ளவர், கை, கால் பாதிக்கப்பட்டோருக்கு, தலா, 1 சதவீதம் பணியிடம் ஒதுக்கப்பட்டு வருகிறது.மாற்றுத் திறனாளிகளுக்கான உரிமைகள் சட்டம் - 2016ன் படி, அரசு பணியிடங்களில், 4 சதவீதம் ஒதுக்கீடு வழங்கப்பட வேண்டும். அதன் அடிப்படையில், ௩ சதவீத ஒதுக்கீட்டை, ௪ சதவீதமாக, தமிழக அரசு பணிகளில் உயர்த்தி வழங்க உத்தரவிட்டுள்ளேன். இந்த ஒதுக்கீட்டில், பார்வை குறைவுடையோருக்கு, 1 சதவீதம்; செவித்திறன் குறைபாடு உள்ளவர், 1 சதவீதம் வழங்கப்படும். கை, கால் பாதிக்கப்பட்டோர், மூளை முடக்குவாதத்தால் பாதிக்கப்பட்டோர், தொழுநோயால் பாதிக்கப்பட்டோர், குள்ளத்தன்மையுடையோர், அமில வீச்சினால் பாதிக்கப்பட்டோர், தசை சிதைவு நோயால் பாதிக்கப்பட்டோர் ஆகியோருக்கு, 1 சதவீதம் வழங்கப்படும். புற உலகு சிந்தனையற்றவர், மன நலம் பாதிக்கப்பட்டவர் உள்ளிட்டோருக்கு, 1 சதவீதம் ஒதுக்கீடு வழங்கப்படும். இந்த 4 சதவீதம் இட ஒதுக்கீடானது, அனைத்து அரசு பணியிடங்கள், பொதுத்துறை நிறுவனம், வாரியம், உள்ளாட்சி அமைப்பு, கல்வி நிறுவனம், அரசு நிதியுதவி பெறும் அமைப்புகளுக்கு பொருந்தும். இவ்வாறு முதல்வர் கூறியுள்ளார்.

No comments:

Post a Comment

குறிப்பு:
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விக்குயிலுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.

-அன்புடன் கல்விக்குயில்.