WELCOME

Blogger Tips and TricksLatest Tips And TricksBlogger Tricks

KK SCROLL

Monday, May 29, 2017

42 நடுநிலைப்பள்ளிக்கு 'தலை' நியமிக்க உத்தரவு.

நான்கு ஆண்டுகளுக்கு முன் தரம் உயர்த்தப்பட்ட 42 நடுநிலைப் பள்ளிகளுக்கு, தலைமை ஆசிரியர்களை நியமிக்க தொடக்கக்கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது.

அனைவருக்கும் கல்வி திட்டம் மூலம்தமிழகத்தில் 2014--15ல் 42 தொடக்கப் பள்ளிகள், நடுநிலை பள்ளிகளாக தரம் உயர்த்தப்பட்டன. இப்பள்ளிகளுக்கு ஆண்டு தோறும் தலா ஒரு பட்டதாரி ஆசிரியர் பணியிடம் வீதம், மூன்று ஆண்டுகளுக்கு அனுமதிக்கப்பட்டது. அதன்படி முதலாம் ஆண்டில் கணிதம், இரண்டாம் ஆண்டில் அறிவியல், மூன்றாம் ஆண்டில் ஆங்கிலப் பாட ஆசிரியர்கள் நியமிக்கப்பட்டனர். ஆனால், தலைமை ஆசிரியர் நியமிக்கப்படவில்லை.
நிதிநிலைமையை காரணம் காட்டி இரண்டு ஆண்டுகளாக, தலைமை ஆசிரியர் பணியிடங்
களுக்கு நிதித்துறை அனுமதி வழங்கவில்லை. இதை கண்டித்து ஆசிரியர்கள் போராட்டம் நடத்தினர். இதையடுத்து தொடக்கப் பள்ளி தலைமை ஆசிரியர், பட்டதாரி ஆசிரியர், 
தமிழாசிரியர்களை பதவி உயர்வு மூலம் தலைமை ஆசிரியர்களாக நியமிக்க, தொடக்கக் கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது.

No comments:

Post a Comment

குறிப்பு:
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விக்குயிலுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.

-அன்புடன் கல்விக்குயில்.