WELCOME

Blogger Tips and TricksLatest Tips And TricksBlogger Tricks

KK SCROLL

Monday, May 29, 2017

முன்கூட்டியே பணி நிரவல் : ஆசிரியர்கள் கொந்தளிப்பு.

பள்ளி கல்வித்துறையில் 2017ம் ஆண்டு மாணவர்கள் எண்ணிக்கையை வைத்து, பணி நிரவல் செய்ய முடிவு செய்யப்பட்டுள்ளதால் ஆசிரியர்கள் கொந்தளிப்படைந்துள்ளனர்.

அரசுப் பள்ளிகளில், மாணவர்கள் எண்ணிக்கைக்கு ஏற்ப, ஆசிரியர்கள் பணி நிரவல் செய்யப்படுவார்கள். 40 மாணவர்களுக்கு ஒரு ஆசிரியர் என்ற நிலையில் பணி நிரவல் செய்யப்படும்.

இந்நிலையில் மே 29, 30ல் அறிவித்தபடி ஆசிரியர்கள் பொது மாறுதல் கலந்தாய்வு நடத்த வேண்டும். உயர்நிலைப் பள்ளி தலைமையாசிரியர் பதவி உயர்வுக்குப் பின், 2017--18ம் கல்வியாண்டில் மாணவர்கள் சேர்க்கை முடிந்தவுடன், ஆசிரியர்களுக்கு பணி நிரவல் நடத்த வேண்டும்.அப்படி நடத்தாமல் முன்கூட்டியே பணி நிரவலை நடத்துவதால், சொந்த மாவட்டங்களுக்கு பணி மாறுதல் பெறுவதற்காக, பல ஆண்டுகள் காத்திருக்கும் ஆசிரியர்கள் பாதிக்கப்படுவார்கள்.மேலும், சொந்த மாவட்டங்களில் பணியாற்றும் ஆசிரியர்கள் வேறு மாவட்டங்களுக்கு செல்லும் நிலையும் ஏற்பட்டுள்ளது.அரசுப் பள்ளி ஆசிரியர்கள் கடுமையாக பணியாற்றியதன் விளைவாக, பொதுத்தேர்வுகளில் அந்த பள்ளிகளின் தேர்ச்சி விகிதம் அதிகரித்துள்ளது.
 
இதனால் அரசுப் பள்ளிகளில், மாணவர்கள் சேர்க்கை அதிகரிக்கும் வாய்ப்பு ஏற்பட்டுள்ளது.

இந்நிலையில் பணி நிரவல் நடத்துவதால், பல ஆசிரியர்கள் பாதிக்கப்படுவார்கள்.
இதுதொடர்பாக ஆசிரியர்கள் தரப்பில் கூறப்படுவதாவது: பொது கலந்தாய்வு நடக்கும்போது, ஆசிரியர்களுக்கு தங்கள் விருப்பப்படியே இடமாறுதல் பெற வாய்ப்பு கிடைக்கும். இந்தாண்டு அரசுப் பள்ளிகளில் மாணவர்கள் சேர்க்கை அதிகரிக்கும். மாணவர்கள் சேர்க்கை முடிவடைந்த பின்னர் ஆகஸ்ட் மாதத்தில் பணி நிரவல் நடத்தினால், அனைவருக்கும் பயனுள்ளதாக இருக்கும் என்றனர்.




No comments:

Post a Comment

குறிப்பு:
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விக்குயிலுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.

-அன்புடன் கல்விக்குயில்.