WELCOME

Blogger Tips and TricksLatest Tips And TricksBlogger Tricks

KK SCROLL

Tuesday, May 16, 2017

இன்ஜி., கவுன்சிலிங் ஆன்லைன் பதிவு தமிழில் வழிகாட்டல் வெளியீடு.

இன்ஜி., படிப்புகளுக்கு, ஆன்லைனில் விண்ணப்பிப்பது எப்படி என, வழிகாட்டும் தகவல்கள், அண்ணா பல்கலை இணையதளத்தில், தமிழில் வெளியிடப் பட்டுள்ளது. பிளஸ் 2 முடித்த மாணவர்கள், இன்ஜி., படிப்பில் சேர, அண்ணா பல்கலையின், ஒற்றை சாளர கவுன்சிலிங்கில் பங்கேற்க வேண்டும். இதற்கு, சென்ற ஆண்டு முதல், ஆன்லைன் விண்ணப்ப பதிவு துவங்கியது. இந்த ஆண்டு, விண்ணப்ப கட்டணத்தையும், ஆன்லைனில் செலுத்த வசதி செய்யப்பட்டுள்ளது. ஆனால், கிராமப்புற பகுதிகளிலும், பின்தங்கிய மாவட்டங்களிலும், மாணவர்களுக்கு, ஆன்லைனில் பதிவு செய்யும் நடைமுறை தெரியவில்லை. இது குறித்து, அண்ணா பல்கலைக்கு பல்வேறு தரப்பில் கோரிக்கைகள் வந்தன. இதை தொடர்ந்து, கவுன்சிலிங்குக்கான, www.tnea.ac.in என்ற இணையதளத்தில், விண்ணப்பிக்கும் முறை குறித்து, தமிழில், வழிகாட்டு தகவல்களை வெளியிட்டுள்ளது. இணையதளத்தின் ஒவ்வொரு பக்கத்திலும் இடம் பெறும் விபரங்கள், அதற்கடுத்த பக்கங்களுக்கு செல்லும் முறை என, அனைத்து விபரங்களையும், அண்ணா பல்கலை இன்ஜி., கவுன்சிலிங் குழு வெளியிட்டுள்ளது. 'மொபைல் போன் வழியே பதியலாம்' : அண்ணா பல்கலையின் இன்ஜி., கவுன்சிலிங் உறுப்பினர் செயலர், பேராசிரியை இந்துமதி கூறியதாவது:தற்போது, ஸ்மார்ட் போன் பயன்படுத்துவோர் எண்ணிக்கை அதிகமாக உள்ளதால், ஸ்மார்ட் போன் மூலமும், கவுன்சிலிங் இணையதளத்தில் பதிவு செய்ய, வசதி செய்துள்ளோம். அதே போல், 'லேப் - டாப், டேப்லெட்' போன்றவற்றிலும், இந்த இணையதளத்தை இயக்கலாம். இவ்வாறு அவர் கூறினார்.

No comments:

Post a Comment

குறிப்பு:
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விக்குயிலுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.

-அன்புடன் கல்விக்குயில்.