WELCOME

Blogger Tips and TricksLatest Tips And TricksBlogger Tricks

KK SCROLL

Tuesday, May 16, 2017

பெட்ரோல், டீசல் விலை குறைப்பு.


பெட்ரோல் விலை லிட்டருக்கு 2 ரூபாய் 16 காசுகளும், டீசல் விலை லிட்டருக்கு 2
ரூபாய் 10 காசுகளும் குறைக்கப்பட்டுள்ளது. இந்த விலைக் குறைப்பு திங்கள்கிழமை நள்ளிரவு முதல் அமலுக்கு வந்துள்ளது. அதன்படி, சென்னையில் ஒரு லிட்டர் பெட்ரோல் விலை ரூ.71.17-இல் (உள்ளூர் வரி தவிர்த்து) இருந்து ரூ.68.26-ஆகக் குறைக்கப்பட்டுள்ளது. ஒரு லிட்டர் டீசல் ரூ.60.71-இல் இருந்து, ரூ.58.07-ஆக விலை சரிந்துள்ளது. இதேபோல், தில்லியில் ஒரு லிட்டர் பெட்ரோல் விலை ரூ.68.09-இல் இருந்து ரூ.65.32-ஆக குறைக்கப்பட்டுள்ளது. ரூ.57.35-க்கு விற்பனை செய்யப்பட்டு வந்த ஒரு லிட்டர் டீசல் தற்போது ரூ.54.90க்கு விற்பனை செய்யப்படுகிறது. இதேபோல், மும்பையில் ஒரு லிட்டர் பெட்ரோல் ரூ.74.72க்கும், டீசல் ரூ.60.47க்கும் விற்பனை செய்யப்படுகிறது. கொல்கத்தாவில் ஒரு லிட்டர் பெட்ரோல் ரூ.68.21-க்கும், டீசல் ரூ.57.26-க்கும் விற்பனை செய்யப்படுகிறது. சர்வதேச சந்தையில் பெட்ரோலியப் பொருள்களின் விலை குறைந்ததால், இந்த விலைக் குறைப்பை நடைமுறைப்படுத்துவதாக இந்தியன் ஆயில் நிறுவனம் தெரிவித்துள்ளது.

No comments:

Post a Comment

குறிப்பு:
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விக்குயிலுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.

-அன்புடன் கல்விக்குயில்.