WELCOME

Blogger Tips and TricksLatest Tips And TricksBlogger Tricks

KK SCROLL

Thursday, June 22, 2017

பிளஸ் 2 மறு மதிப்பீடு ’ரிசல்ட்’ வெளியீடு.

பிளஸ் 2 தேர்வில், மறுகூட்டல் மற்றும் மறுமதிப்பீடு மதிப்பெண் பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது.பிளஸ் 2 தேர்வு விடைத்தாளில், கூட்டல் பிழைகள் இருப்பதாக கருதிய மாணவர்களிடம், மறுகூட்டலுக்கான விண்ணப்பங்கள் பெறப்பட்டன. 


அதன்படி, கூட்டல் பிழைகள் மறுதிருத்தம் செய்யப்பட்டன. சரியாக மதிப்பிடாத விடைத்தாள்களும், மீண்டும் மதிப்பீடு செய்யப்பட்டன.திருத்தம் செய்யப்பட்ட மதிப்பெண் விபரம், நேற்று தேர்வுத் துறையின்,www.dge.tn.nic.in என்ற இணையதளத்தில் வெளியிடப்பட்டது. 


விண்ணப்பித்த மாணவர்கள், தங்கள் பதிவு எண், பிறந்த தேதியை பயன்படுத்தி, புதிய மதிப்பெண்ணை தெரிந்து கொள்ளலாம்.மதிப்பெண் மாறுதலான பதிவெண்கள் மட்டும், scan.tndge.in என்ற இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளன. மதிப்பெண்ணில் மாற்றம் இல்லாதவர்களின், பதிவெண் வெளியிடப்படவில்லை.

No comments:

Post a Comment

குறிப்பு:
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விக்குயிலுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.

-அன்புடன் கல்விக்குயில்.