WELCOME

Blogger Tips and TricksLatest Tips And TricksBlogger Tricks

KK SCROLL

Thursday, June 29, 2017

பள்ளிக்கல்வியில் மாற்றம் தொடரும்! : அமைச்சர் செங்கோட்டையன் அறிவிப்பு.

பள்ளிக்கல்வித் துறையில், இன்னும் மாற்றங்களை எதிர்பார்க்கலாம்; அடுத்தடுத்து அறிவிப்புகள் வரும்,'' என, அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்தார். சட்டசபையில், கேள்வி நேரத்தில் நடந்த விவாதம்: தி.மு.க., - சபா.ராஜேந்திரன்: கடலுார் மாவட்டம், நெய்வேலி தொகுதி, கீழிருப்பு ஊராட்சியில், நுாலகம் அமைக்கும் திட்டம் உள்ளதா? அமைச்சர் செங்கோட்டையன்: தற்போது இல்லை. சபா.ராஜேந்திரன்: அண்ணா மறுமலர்ச்சி திட்டத்தில் கட்டப்பட்ட, நுாலக கட்டடம் உள்ளது. எனவே, அங்கு நுாலகம் அமைக்க வேண்டும். அமைச்சர் செங்கோட்டையன்: நிபந்தனைகள் பூர்த்தி செய்யப்பட்டால், கோரிக்கை பரிசீலிக்கப்படும். தி.மு.க., - ஆடலரசன்: திருத்துறைப்பூண்டி அரசு மேல்நிலைப் பள்ளி வளாகத்தில், நுாலகம் திறக்கப்பட்டு உள்ளது. அந்த கட்டடத்தில், வவ்வால்கள் உள்ளன. அவற்றை வெளியேற்ற, நடவடிக்கை எடுக்க வேண்டும். நல்ல நுால்களை, நுாலகங்களுக்கு வழங்க வேண்டும். அமைச்சர் செங்கோட்டையன்: உரிய நடவடிக்கை எடுக்கப்படும். தி.மு.க., - ரங்கநாதன்: வாசிப்போர் எண்ணிக்கை குறைந்து வருகிறது. இந்நிலை மாற, ஊராட்சி, நகராட்சி, மாநகராட்சி பகுதிகளில் நுாலகம் அமைக்க வேண்டும். நல்ல புதிய நுால்களை வழங்க வேண்டும். அமைச்சர் செங்கோட்டையன்: சிவில் சர்வீசஸ் தேர்வுக்கு தேவையான நுால்களை வாங்கி வைக்க, நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு உள்ளது. அ.தி.மு.க., - தென்னரசு: எம்.எல்.ஏ., தொகுதி மேம்பாட்டு நிதியில், நுாலகங்களுக்கு கட்டடம் கட்ட, நிதி ஒதுக்க அனுமதி வழங்க வேண்டும். அமைச்சர் செங்கோட்டையன்: நிதி ஒதுக்கலாம். அ.தி.மு.க., - கதிர்காமு: கல்வித் துறையில், அமைச்சர் பல்வேறு மாற்றங்களை செய்து வருகிறார். தேனி நகரில், ஒரே ஒரு அரசு மேல்நிலைப் பள்ளி உள்ளது. மாணவர் நலன் கருதி, ஆண்கள் மற்றும் பெண்களுக்கு, தனித்தனி பள்ளி அமைக்க வேண்டும். அமைச்சர் செங்கோட்டையன்: உங்கள் கோரிக்கை பரிசீலிக்கப்படும். பள்ளிக்கல்வித் துறையில், இன்னும் பெரும் மாற்றங்களை எதிர்பார்க்கலாம்; அடுத்தடுத்து அறிவிப்புகள் வரும். இவ்வாறு விவாதம் நடந்தது.

No comments:

Post a Comment

குறிப்பு:
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விக்குயிலுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.

-அன்புடன் கல்விக்குயில்.