WELCOME

Blogger Tips and TricksLatest Tips And TricksBlogger Tricks

KK SCROLL

Friday, June 23, 2017

நீட் தேர்வு முடிவுகள் வெளியானது.

மருத்துவ படிப்புகளில் சேர நடத்தப்பட்ட நீட் நுழைவு தேர்வு முடிவு இணையதளத்தில் வெளியிடப்பட்டன. அனுமதி: எம்.பி.பி.எஸ்., மற்றும் பி.டி.எஸ்., படிப்பில் சேர, இந்த ஆண்டு அனைத்து மாநிலங்களிலும், ’நீட்’ நுழைவு தேர்வு கட்டாயமாகி உள்ளது. மே, 7ல் நடந்த இந்த தேர்வை, 10 லட்சத்துக்கு மேற்பட்டோர் எழுதினர். இந்நிலையில், தேர்வுக்கான கட்டுப்பாடுகள், வினாத்தாள் வடிவமைப்பு குறித்து, நீதிமன்றத்தில் பல்வேறு வழக்குகள் பதிவாகின. தொடர்ந்து, தேர்வு முடிவை வெளியிட மதுரை ஐகோர்ட் கிளை தடை விதித்தது. அதனால், ’நீட்’ தேர்வு முடிவுக்கான நடவடிக்கைகள் நிறுத்தப்பட்டன. இதனை எதிர்த்து சி.பி.எஸ்.இ., தாக்கல் செய்த மனுவை விசாரித்த உச்ச நீதிமன்றம் நீட் தேர்வு முடிவுகளை வெளியிட, உத்தரவிட்டது. வெளியீடு: இந்நிலையில், நீட் தேர்வு முடிவுகள் சி.பி.எஸ்.இ., இணையதளத்தில் (http://cbseresults.nic.in/neet17rpx/neetJ17.htm) வெளியிடப்பட்டன. இதில், தங்களது பதிவெண் மற்றும் பிறந்த தேதியை குறிப்பிட்டு முடிவுகளை தெரிந்து கொள்ளலாம்.

No comments:

Post a Comment

குறிப்பு:
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விக்குயிலுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.

-அன்புடன் கல்விக்குயில்.