WELCOME

Blogger Tips and TricksLatest Tips And TricksBlogger Tricks

KK SCROLL

Sunday, July 30, 2017

11-ஆம் வகுப்பு பொதுத்தேர்வு மாதிரி வினாத்தாள் நாளை வெளியீடு: அமைச்சர் செங்கோட்டையன் தகவல்!

"11-ஆம் வகுப்பு பொதுத்தேர்வு மாதிரி வினாத்தாள் நாளை வெளியிடப்படும் என்று தமிழக பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் தகவல் தெரிவித்துள்ளார். நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொள்வதற்காக தமிழக பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் இன்று கோபிச்செட்டிப்பாளையம் வந்திருந்தார்.அப்பொழுது செய்தியாளர்களிடம் அவர் பேசியதாவது: 11-ஆம் வகுப்பு மாணவர்களுக்கான பொதுத்தேர்வு மாதிரி வினாத்தாள் நாளை வெளியிடப்பட உள்ளது. இது மாணவர்களிடையே நிலவும் தேவையற்ற அச்ச உணர்வினை போக்க உதவும். அத்துடன் பல்வேறு போட்டித் தேர்வுகளுக்கு தயாராகும் வகையில் மாணவர்களுக்கு 450 பயிற்ச்சி மையங்கள் மூலம் சனிக்கிழமைகளில் பயிற்சி வழங்கப்படும். அத்ததுடன் ஆரம்ப கல்வி வகுப்புகளில் ஸ்மார்ட் வகுப்பறைகளை அறிமுகம் செய்வது தொடர்பாகவும் ஆலோசித்து வருகிறோம். இவ்வாறு செங்கோட்டையன் செய்தியாளர்களிடம் தெரிவித்தார்.

No comments:

Post a Comment

குறிப்பு:
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விக்குயிலுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.

-அன்புடன் கல்விக்குயில்.