WELCOME

Blogger Tips and TricksLatest Tips And TricksBlogger Tricks

KK SCROLL

Tuesday, August 1, 2017

'நாக்' தர மதிப்பீடு கட்டாயம் : யு.ஜி.சி., தலைவர் கண்டிப்பு.

'அனைத்து கல்லுாரிகளும், மத்திய அரசின், 'நாக்' தர மதிப்பீடு பெறுவது கட்டாயம்' என, பல்கலைக்கழக மானிய குழுவான, யு.ஜி.சி., தெரிவித்துள்ளது.
'நாக்' தர மதிப்பீடு பெறுவதற்கான, புதிய விதிமுறைகள் குறித்து, சென்னை பல்கலை துணைவேந்தர் துரைசாமி தலைமையில், நேற்று கருத்தரங்கம் நடந்தது. இதில், யு.ஜி.சி., தலைவர், வீரேந்தர் எஸ்.சவுகான் பேசியதாவது: நம்நாட்டில், 1947ல், 20 பல்கலைகளும், 400 கல்லுாரிகளும் இருந்தன. தற்போது, 800 பல்கலைகளும், 40 ஆயிரம் கல்லுாரிகளும் உள்ளன. கல்வித் தரத்தை உயர்த்துவதற்காக, உள்கட்டமைப்பு வசதி, தகுதியான ஆசிரியர்கள் நியமனம் போன்றவற்றில், கவனம் செலுத்த வேண்டியுள்ளது. இதற்காக, 'நாக்' தர மதிப்பீடு முறை பின்பற்றப்படுகிறது.
எனவே, இந்த தர மதிப்பீட்டை, அனைத்து கல்லுாரிகளும் பெற வேண்டியது கட்டாயம். இதற்கு, ஆன்லைனில் விண்ணப்பிக்க, ஆகஸ்ட் வரை அவகாசம் வழங்கப்பட்டு உள்ளது. ஒவ்வொரு கல்லுாரியும், மாணவர்களின் கல்வித்தரத்தை உயர்த்தும் வகையில், உள்கட்டமைப்பை மேம்படுத்துவதுடன், புதிய கண்டுபிடிப்பு மற்றும் ஆராய்ச்சியை அதிகரிக்கும் வகையில் கற்பிக்க வேண்டும்.இவ்வாறு அவர் பேசினார்.நிகழ்ச்சியில், பல்வேறு கல்லுாரிகள் மற்றும் 
பல்கலைகளின் பேராசிரியர்கள் பங்கேற்றனர்.

No comments:

Post a Comment

குறிப்பு:
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விக்குயிலுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.

-அன்புடன் கல்விக்குயில்.