WELCOME

Blogger Tips and TricksLatest Tips And TricksBlogger Tricks

KK SCROLL

Tuesday, August 1, 2017

தேர்தல் பணியில் ஆசிரியர்களை ஈடுபடுத்தக் கூடாது.

தேர்தல் பணியில், ஆசிரியர்களை ஈடுபடுத்தக் கூடாது’ என, உயர்நிலை மற்றும் மேல்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர்கள் சங்க பொதுக்குழு கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. திருவண்ணாமலையில், உயர்நிலை மற்றும் மேல்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர்கள் சங்க மாநில பொதுக்குழு கூட்டம் நடந்தது. மாநில தலைவர் சத்தியமூர்த்தி தலைமை வகித்தார். மாநில பொதுச் செயலாளர் நடராஜன் உட்பட பலர் பங்கேற்றனர். கூட்டத்தில், உயர்நிலை மற்றும் மேல்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர் காலிப்பணியிடங்களை, உடனடியாக நிரப்ப வேண்டும். 1987-1989 வரை வேலை வாய்ப்பு அலுவலகம் மூலம், ஒப்பந்த அடிப்படையில் நியமனம் செய்யப்பட்ட, இடைநிலை மற்றும் பட்டதாரி ஆசிரியர்களின் பணிக்காலத்தை, ஓய்வூதிய பலன்கள் கிடைக்கும் வகையில் முறைப்படுத்த வேண்டும். புதிய பாடத்திட்ட அமைப்பு குழுக்களில், ஆசிரியர் சங்க பிரதிநிதிகளை இணைத்து கொள்வதோடு, அனைத்து பாட குழுக்களிலும், உயர்நிலை மற்றும் மேல்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர்கள் இடம் பெறுவதை, தமிழக அரசு உறுதிப்படுத்த வேண்டும். தேர்தல் பணிகளில், ஆசிரியர்களை ஈடுபடுத்தக்கூடாது. ஆசிரியர்களை ஆதார் கணக்கெடுப்பு, வாக்காளர் பெயர் சேர்த்தல், நீக்கல், வேலை வாய்ப்பு பதிவு செய்தல், மற்றும் சுகாதார பணிகளான தடுப்பூசி மற்றும் மாத்திரைகள் வழங்கல் போன்ற பணிகளை செய்ய வலியுறுத்தக் கூடாது. அனைத்து உயர்நிலை மற்றும் மேல்நிலைப் பள்ளிகளுக்கு, பத்து கம்ப்யூட்டர் வழங்கி, வைபை இண்டர்நெட் இணைப்பு ஏற்படுத்தி தர வேண்டும். மேலும் தகுதி வாய்ந்த கணினி ஆசிரியரை நியமனம் செய்ய வேண்டும் என்பன உட்பட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

No comments:

Post a Comment

குறிப்பு:
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விக்குயிலுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.

-அன்புடன் கல்விக்குயில்.