Tuesday, August 1, 2017
ஜாக்டோ- ஜியோ பொதுக்குழு கூட்டம்.
தமிழ்நாடு ஆசிரியர், அரசு ஊழியர், பணியாளர் இயக்கங்களின் கூட்டு நடவடிக்கை குழு (ஜாக்டோ- ஜியோ) சார்பில், மாவட்ட பொதுக்குழு கூட்டம் நடந்தது. வரும் 5 ம் தேதி, நடக்கவுள்ள மாநிலம் தழுவிய போராட்டம் குறித்து, இதில் ஆலோசிக்கப்பட்டது.
தமிழக ஆசிரியர் கூட்டணி மாவட்ட செயலாளர் ராஜசேகரன் கூறுகையில், ”எட்டாவது ஊதியக்குழு மாற்றங்களை, உடனடியாக கொண்டு வர வேண்டும். ஏழாவது ஊதியக்குழுவில் உள்ள, குறைபாடுகள் களையப்பட வேண்டும். பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்துதல் உள்ளிட்ட, மூன்று கோரிக்கைகள் வலியுறுத்தி, ஜாக்டோ- ஜியோ சார்பில், கடந்த 18 ம் தேதி, அனைத்து மாவட்டங்களிலும், ஆர்ப்பாட்டம் நடந்தது.
இதற்கு அரசு செவிசாய்க்காததால், வரும் 5 ம் தேதி, சென்னையில் போராட்டம் அறிவிக்கப்பட்டுள்ளது. ’இப்போராட்டத்தில், கோவை மாவட்டத்தில் இருந்து, 10 ஆயிரம் ஆசிரியர்கள், அரசு ஊழியர்கள் பங்கேற்க முடிவு செய்யப்பட்டுள்ளது,” என்றார்.
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment
குறிப்பு:
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விக்குயிலுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விக்குயில்.