Thursday, July 6, 2017
27 லட்சம் மாணவருக்கு இலவச பஸ் பாஸ்.
மாணவ, மாணவியருக்கு, இலவச கையடக்க பஸ் பாஸ் வழங்கும் பணியை, முதல்வர் பழனிசாமி, நேற்று துவக்கி வைத்தார். 'காஞ்சிபுரம் மாவட்டம், பெரும்பாக்கத்தில், பணிமனையுடன் கூடிய பஸ் முனையம்; கோவை மாவட்டம், சூலுாரில், பஸ் பணிமனை கட்டப்படும்' என, 2013 மே, 10ல், முதல்வராக இருந்த, ஜெ., 110 விதியின் கீழ், சட்டசபையில் அறிவித்தார்.
அதன்படி, இரு பணிகளும், 15.50 கோடி ரூபாயில் முடிக்கப்பட்டு உள்ளன. இப்பணிமனைகளை, முதல்வர் பழனிசாமி, நேற்று முன்தினம் தலைமை செயலகத்தில், 'வீடியோ கான்பரன்ஸ்' மூலம் திறந்து வைத்தார்.
அத்துடன், நடப்பு கல்வியாண்டில், 739 கோடி ரூபாய் செலவில், 27.05 லட்சம் பள்ளி மற்றும் கல்லுாரி மாணவ, மாணவியருக்கு, இலவச கையடக்க பஸ் பாஸ் வழங்கும் பணியை துவக்கி வைத்து, ஏழு மாணவ, மாணவியருக்கு, பஸ் பாஸ் வழங்கினார்.
இந்நிகழ்ச்சியில், அமைச்சர்கள் ராதாகிருஷ்ணன், எம்.ஆர்.விஜயபாஸ்கர், தலைமை செயலர் கிரிஜா வைத்தியநாதன் பங்கேற்றனர்.

Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment
குறிப்பு:
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விக்குயிலுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விக்குயில்.