"தமிழகத்தில் பாலிடெக்னிக் கல்லூரிகளில் உள்ள 1058 ஆசிரியர் பணியிடங்களை நிரப்புவது தொடர்பாக தமிழக அரசு கடந்த ஜூன் 16-ம் தேதி அறிவிப்பாணை வெளியிட்டது. தமிழக அரசின் அரசாணையில் பி.இ. படிப்பில் முதல் வகுப்பில் தேர்ச்சி பெற்றவர்கள் மட்டுமே விண்ணப்பிக்க முடியும் என்ற விதி இருந்தது. இதனையடுத்து, தமிழக அரசின் இந்த நிபந்தனைக்கு எதிர்ப்பு தெரிவித்து சேலம் மாவட்டத்தை சேர்ந்த செல்லமுத்து என்பவர் சென்னை உயர்நீதிமன்றத்தில் மனு ஒன்றினை தாக்கல் செய்தார். செல்லமுத்து தனது மனுவில், பி.இ. படிப்பில் இரண்டாம் வகுப்பில் தேர்ச்சி பெற்று, எம்.இ.-யில் முதல் வகுப்பில் தேர்ச்சி பெற்ற தன்னால் விண்ணப்பிக்க முடியவில்லை என்று குறிப்பிட்டு இருந்தார். இந்தநிலையில், செல்லமுத்து மனுவை விசாரித்த சென்னை உயர்நீதிமன்றம், பாலிடெக்னிக் கல்லூரிகளில் காலியாக உள்ள 1058 ஆசிரியர் பணி இடங்களை நிரப்பும் தமிழக அரசின் அறிவிப்பாணையை ரத்து செய்து உத்தரவிட்டுள்ளது.
No comments:
Post a Comment
குறிப்பு:
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விக்குயிலுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விக்குயில்.