WELCOME

Blogger Tips and TricksLatest Tips And TricksBlogger Tricks

KK SCROLL

Sunday, July 30, 2017

'ராகிங்'கை தடுக்க கல்லூரிகளுக்கு அறிவுரை.

கல்லுாரி மற்றும் பல்கலைகளில், 'ராகிங்'கை தடுக்க, தீவிர நடவடிக்கை எடுக்குமாறு, பல்கலை மானியக் குழுவான, யு.ஜி.சி., அறிவுறுத்தி உள்ளது.இது குறித்து, யு.ஜி.சி., செயலர் ஜஸ்பால் சந்து, கல்லுாரிகள், பல்கலைகளுக்கு அனுப்பிய சுற்றறிக்கை:கல்லுாரிகள் மற்றும் பல்கலைகளில், புதிய மாணவர்கள் சேர்க்கப்பட உள்ளனர். பழைய மாணவர்கள், புதியவர்களை, 'ராகிங்' செய்யும் நடவடிக்கை, கிரிமினல் குற்றம். இது குறித்து, பல்வேறு வழிகாட்டுதல்கள், கல்லுாரிகளுக்கு வழங்கப்பட்டு உள்ளன.* முதல்வரின் அறை முன், புகார் பதிவு புத்தகம் வைக்க வேண்டும்* கல்லுாரி வளாகம் முழுவதும் தெரியும்படி, கண்காணிப்பு கேமரா, செயல்பாட்டில் இருக்க வேண்டும்* மாணவர்களுக்கு ஒருங்கிணைப்பு நிகழ்ச்சி நடத்தி, 'ராகிங்' நடவடிக்கைகளை தடுக்க வேண்டும்* மாணவர்களிடமிருந்து புகார் வந்தால், உடனே விசாரித்து நடவடிக்கை எடுக்க வேண்டும்* 'ராகிங்' கண்காணிப்பு கமிட்டி அமைத்து, கல்லுாரி வளாகத்தில், ஆசிரியர்கள் நேரடி கண்காணிப்பில் ஈடுபட வேண்டும்.இவ்வாறு பல அறிவுரைகள் வழங்கப்பட்டு உள்ளன.

No comments:

Post a Comment

குறிப்பு:
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விக்குயிலுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.

-அன்புடன் கல்விக்குயில்.