WELCOME

Blogger Tips and TricksLatest Tips And TricksBlogger Tricks

KK SCROLL

Sunday, July 30, 2017

என்.சி.இ.ஆர்.டி., புத்தகம்: சி.பி.எஸ்.இ., சுற்றறிக்கைக்கு தடை.

சென்னை, மத்திய இடைநிலை கல்வி வாரியமான, சி.பி.எஸ்.இ., 2017, ஏப்ரலில், ஒரு சுற்றறிக்கை வௌியிட்டது. அதில், 'சி.பி.எஸ்.இ., பள்ளிகள் அனைத்தும், என்.சி.இ.ஆர்.டி., புத்தகங்களை மட்டுமே, மாணவர்களுக்கு வாங்க வேண்டும்' என, கூறப்பட்டது. இந்த சுற்றறிக்கையை எதிர்த்து, சென்னை உயர் நீதிமன்றத்தில், சி.பி.எஸ்.இ., பள்ளிகள் சங்கம் மனு தாக்கல் செய்தது.மனுவை விசாரித்த, நீதிபதி கிருபாகரன் பிறப்பித்த, இடைக்கால உத்தரவு:இந்த சங்கத்தில், சி.பி.எஸ்.இ., அமைப்பில் இணைந்துள்ள, ௨௮௭ பள்ளிகள் உறுப்பினர்களாக உள்ளன். 2017, ஏப்ரலில் பிறப்பிக்கப்பட்ட சுற்றறிக்கை, 2014, பிப்ரவரியில் பிறப்பித்த சுற்றறிக்கைக்கு முரணாக உள்ளது. புத்தகங்களின் தரம், அடக்கம் பற்றி சரிபார்க்காமல், தனியார் நிறுவனங்களின் புத்தகங்களை வாங்குவதற்கு அனுமதித்த, சி.பி.எஸ்.இ., நிர்வாகத்தை தான் குறை கூற வேண்டும். என்.சி.இ.ஆர்.டி., மற்றும் தனியார் நிறுவனங்களின் புத்தகங்களை, சி.பி.எஸ்.இ., பள்ளிகள் வாங்க, 2014ல் பிறப்பிக்கப்பட்ட சுற்றறிக்கை அனுமதி அளிக்கிறது. தற்போது பிறப்பிக்கப்பட்ட சுற்றறிக்கையில், விரிவான விபரங்கள் இல்லை. எனவே, அந்த சுற்றறிக்கைக்கு தடை விதிக்கப்படுகிறது. 287 பள்ளிகள் கொண்ட சங்கம், ஒரே மனுவை தாக்கல் செய்ததன் மூலம், அதன் உறுப்பினர் பள்ளிகள் அனைத்தும் பலன் பெறுகின்றன.சங்கத்தின் சார்பில் மனு தாக்கல் செய்ய அனுமதிக்கப்பட்டதால், அதன் உறுப்பினர்கள் ஒவ்வொருவரும், தலா, 1,000 ரூபாய் என, மொத்தம், 2.87 லட்சம் ரூபாய் கட்டணமாக செலுத்த வேண்டும். தவறினால், நீதிமன்றம் தகுந்த உத்தரவை பிறப்பிக்கும். மனுவுக்கு, சம்பந்தப்பட்டவர்கள் பதிலளிக்க, 'நோட்டீஸ்' அனுப்ப உத்தரவிடப்படுகிறது. விசாரணை, ஆக.,4க்கு தள்ளி வைக்கப்படுகிறது.இவ்வாறு நீதிபதி உத்தரவிட்டுள்ளார்.

No comments:

Post a Comment

குறிப்பு:
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விக்குயிலுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.

-அன்புடன் கல்விக்குயில்.