WELCOME

Blogger Tips and TricksLatest Tips And TricksBlogger Tricks

KK SCROLL

Sunday, July 30, 2017

விடுமுறை நாளில் வகுப்பு கல்லூரிகளுக்கு உத்தரவு.

இன்ஜி., கவுன்சிலிங் தாமதமானதால், விடுமுறை நாட்களிலும் வகுப்புகளை நடத்த, கல்லுாரிகளுக்கு, அண்ணா பல்கலை அறிவுறுத்தியுள்ளது.மருத்துவ படிப்புக்கான, 'நீட்' தேர்வு பிரச்னையால், தமிழகத்தில் மட்டும், இன்னும் மருத்துவ கவுன்சிலிங் நடக்கவில்லை. இதனால், இன்ஜி., கவுன்சிலிங்கும், மூன்று வாரங்கள் தாமதமாக துவங்கப்பட்டுள்ளன. தற்போதைய நிலையில், ஆக., 25க்குள் கவுன்சிலிங் நடவடிக்கைகளை முடித்து கொள்ள, அண்ணா பல்கலை திட்டமிட்டுள்ளது. இதை தொடர்ந்து, செப்., 3க்குள் கல்லுாரிகளில், முதலாம் ஆண்டு வகுப்புகள் துவங்க உள்ளன.அகில இந்திய தொழில்நுட்ப கவுன்சில் விதிகளின் படி, ஆக., முதல் வாரம் வகுப்புகளை துவங்க வேண்டும். மேலும், அண்ணா பல்கலையின் விதிகளின் படி, ஒரு செமஸ்டருக்கு, 75 நாட்கள் வகுப்புக்கும், 15 நாட்கள் தேர்வுக்கும் என, மொத்தம், 90 நாட்கள் கல்லுாரிகள் இயங்க வேண்டும்.இந்த ஆண்டு, தாமதமான கவுன்சிலிங்கால், வகுப்பு நடத்துவதில், நாட்கள் பற்றாக்குறை ஏற்படும் அபாயம் உள்ளது.'இதை சமாளிக்க, வழக்கமாக விடுமுறை அறிவிக்கப்படும், அனைத்து சனிக்கிழமைகளிலும், முதலாம் ஆண்டு மாணவர்களுக்கு வகுப்புகள் நடத்த வேண்டும். பல்கலை செமஸ்டர் தேர்வு அட்டவணையை பின்பற்ற வேண்டும்; மீறினால் நடவடிக்கை எடுக்கப் படும்' என, அண்ணா பல்கலை எச்சரித்துள்ளது.

No comments:

Post a Comment

குறிப்பு:
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விக்குயிலுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.

-அன்புடன் கல்விக்குயில்.