:கோரிக்கைகளை வலியுறுத்தி, ஆசிரியர்கள் மற்றும் அரசு ஊழியர்கள் இணைந்து, ஆக., 5ல் சென்னையில் கோட்டையை நோக்கி பேரணி நடத்த இருப்பதாகஅறிவித்துள்ளனர்.'புதிய ஓய்வூதிய திட்டத்தை ரத்து செய்ய வேண்டும்; எட்டாவது ஊதிய மாற்றத்தை ஏற்படுத்துவதோடு, முரண்பாடுகளை களைய வேண்டும்' என்பது உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி, ஆசிரியர்கள், அரசு ஊழியர்கள் மற்றும் பணியாளர்கள் இணைந்த, 'ஜாக்டோ - ஜியோ' அமைப்பினர் போராட்டம் நடத்தி வருகின்றனர். போராட்டக்குழுவின் ஆய்வு கூட்டம், கோவையில் நேற்று நடந்தது. இதன் அமைப்பாளர்கள் செந்தில்
குமார் உள்ளிட்டோர் கூறியதாவது:கோரிக்கையை வலியுறுத்தி, ஆக., 5ல் கோட்டையை நோக்கி பேரணி, 22ல் அடையாள வேலைநிறுத்தம் செய்யப்படும். 26ல் வேலைநிறுத்த ஆயத்த மாநாடு நடக்கும்.செப்., 7 முதல், காலவரையற்ற வேலை நிறுத்தபோராட்டம் நடத்தப்படும்.இதில், 27 ஆசிரியர் சங்கங்கள், 17 அரசு ஊழியர் சங்கங்கள் உட்பட, 64 சங்கங்கள் கைகோர்த்துள்ளன. போராட்டத்தில் ஈடுபடும் சங்கத்தினரை, அழைத்து பேசி, கோரிக்கைகளை, அரசு நிறைவேற்ற வேண்டும். அதுவரை, திட்டமிட்டபடி போராட்டம் நடைபெறும்.
இவ்வாறு அவர்கள் கூறினர்.
No comments:
Post a Comment
குறிப்பு:
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விக்குயிலுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விக்குயில்.