WELCOME

Blogger Tips and TricksLatest Tips And TricksBlogger Tricks

KK SCROLL

Sunday, August 6, 2017

5, 8ஆம் வகுப்புகளுக்கு விரைவில் பொதுத் தேர்வு: மத்திய அரசு அறிவிப்பு.

ஐந்து மற்றும் எட்டாம் வகுப்புகளுக்கு விரைவில் பொதுத் தேர்வு முறை கொண்டுவரப்படும் என்று மத்திய மனிதவள மேம்பாட்டுத் துறை அமைச்சர் பிரகாஷ் ஜாவடேகர் தெரிவித்துள்ளார். ராஜஸ்தான் மாநிலம், ஜெய்ப்பூரில் நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில், இதுதொடர்பாக அவர் கூறியதாவது: தில்லியில் அண்மையில் நடைபெற்ற மத்திய அமைச்சரவைக் கூட்டத்தில், 5 மற்றும் 8-ஆம் வகுப்புகளுக்கு பொதுத் தேர்வு நடத்துவது குறித்து ஆலோசனை நடத்தப்பட்டது. அப்போது, 5 மற்றும் 8ஆம் வகுப்புகளுக்கு பொதுத் தேர்வு முறையை கொண்டு வரலாம் என்று முடிவெடுக்கப்பட்டது. இந்த முடிவுக்கு, 24 மாநிலங்கள் தங்களது ஒப்புதலை அளித்துள்ளன. இந்த பொதுத் தேர்வில் தோல்வியடையும் மாணாக்கர்கள், அதே ஆண்டு மே மாதம் மீண்டும் மறுதேர்வு எழுதலாம். அதிலும் மாணாக்கர்கள் வெற்றியடைய முடியாத பட்சத்தில், தோல்வியடைந்தவர்களாக கருதப்படுவர். அவர்கள் மீண்டும் அதே வகுப்பில் படிக்க வேண்டிய சூழ்நிலை ஏற்படும். நாடு சுதந்திரமடையும்போது, கல்வி கற்றோர் எண்ணிக்கை வெறும் 18 சதவீதமாக இருந்தது. அந்த எண்ணிக்கை தற்போது 80 சதவீதமாக உயர்ந்துள்ளது. அடுத்த 5 ஆண்டுகளில், நமது நாட்டில் கல்வி கற்றோர் எண்ணிக்கை 100 சதவீதமாக உயரும். நாட்டின் பல்வேறு இடங்களில், உலகத் தரத்திலான 20 பல்கலைக்கழகங்களை மத்திய அரசு அமைக்கவுள்ளது. புதிய கல்விக் கொள்கை: கல்வியின் தரம் உள்ளிட்ட 5 அம்சங்களை அடிப்படையாகக் கொண்டு, மத்திய அரசு புதிய கல்விக் கொள்கையை உருவாக்கி வருகிறது என்றார் ஜாவடேகர்.

No comments:

Post a Comment

குறிப்பு:
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விக்குயிலுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.

-அன்புடன் கல்விக்குயில்.