அரசு பள்ளியில் பணிபுரியும் ஆசிரியர்கள் தங்களது குழந்தைகளை அரசு பள்ளிகளில் சேர்க்க உத்தரவிட வேண்டும்.
ஆசிரியர் சங்கங்களை தடை செய்ய வேண்டும் என சென்னை ஐகோர்ட்டில் பொது நல வழக்கு தொடரப்பட்டது.
உரிமை:
வழக்கில், தமிழக அரசு சார்பில் தாக்கல் செய்யப்பட்ட பதில் மனுவில்: தங்களது குழந்தைகளை அரசு பள்ளியில் சேர்க்க வேண்டும் என அரசு பள்ளி ஆசிரியர்களை கட்டாயபடுத்த முடியாது. இந்த விவகாரத்தில் ஐகோர்ட் எதிர்பார்ப்பு நியாயமானது. ஆசிரியர்களிடம் மனமாற்றம் ஏற்பட்டால், அவர்கள் தாங்களாகவே, குழந்தைகளை அரசு பள்ளியில் சேர்ப்பார்கள்.
அரசு பள்ளியில், தங்களது குழந்தைகளை அரசு பள்ளி ஆசிரியர்கள் சேர்க்க வேண்டும் என்ற கோரிக்கை நியாயமானது தான். பெற்றோர் என்ற முறையில் குழந்தைகளை எங்கு சேர்க்க வேண்டும் என்ற உரிமை அவர்களுக்கு உள்ளது.
கட்டமைப்பு வசதிகளுக்காக பிள்ளைகளை தனியார் பள்ளியில் பெற்றோர்கள் சேர்க்கின்றனர். 2012- 13ல் 320 அரசு பள்ளியில் சோதனை முறையில் ஆங்கில வழி கல்வி துவங்கப்பட்டுள்ளது. பள்ளி ஆசிரியர் சங்கங்களுக்கு தடை விதிக்க முடியாது
நடவடிக்கை:
கடந்த 4 ஆண்டில் உரிய நேரத்திற்கு வராத 910 ஆசிரியர்கள் மீது ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. பயோ மெட்ரிக் முறை பெரம்பலூர் பள்ளிகளில் அமல்படுத்தப்பட்டது. பள்ளி ஆசிரியர்களை கண்காணிக்க சிசிடிவி கேமரா அமைப்பது என்பது அரசுக்கு நிதிச்சுமையை ஏற்படுத்தும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
No comments:
Post a Comment
குறிப்பு:
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விக்குயிலுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விக்குயில்.