WELCOME

Blogger Tips and TricksLatest Tips And TricksBlogger Tricks

KK SCROLL

Friday, August 18, 2017

அரசு பள்ளி ஆசிரியர்களுக்கு பேராசிரியர்கள் பயிற்சி.

தேசிய நுழைவு தேர்வுகளை, அரசு பள்ளி மாணவர்கள் சந்திக்கும் வகையில், ஐ.ஐ.டி., மற்றும் அண்ணா பல்கலை பேராசிரியர்கள் சார்பில், தமிழக ஆசிரியர்களுக்கு சிறப்பு பயிற்சி அளிக்க, பள்ளிக் கல்வித்துறை முடிவு செய்துள்ளது. 

பிளஸ் 2 முடிக்கும் மாணவர்கள், உயர் கல்வியில் சேர, பல்வேறு நுழைவு தேர்வுகள் நடத்தப்படுகின்றன. பொறியியல், மருத்துவம் உள்ளிட்ட பல படிப்புகளுக்கு, 50க்கும் மேற்பட்ட நுழைவு தேர்வுகள் நடத்தப்படுகின்றன. இதில், தமிழக மாணவர்கள் குறைந்த அளவே தேர்ச்சி பெறுகின்றனர்.


இந்த நிலையை மாற்றி, தமிழக மாணவர்கள், உயர் கல்வியில் எளிதாக இடங்களை பெறும் வகையில், நுழைவு தேர்வுக்கு மாணவர்கள் தயார்படுத்தப்படுகின்றனர். இதன் முதற்கட்டமாக, 14 ஆண்டு பழமையான பாடத்திட்டம் மாற்றப்படுகிறது. அதைத் தொடர்ந்து, ஆசிரியர்களின் கற்பித்தல் முறையை மாற்றவும், தமிழக அரசு முடிவு செய்துள்ளது.


தற்போது, மாநில கல்வியியல் ஆராய்ச்சி மற்றும் பயிற்சி நிறுவனத்தின் சார்பில், ஆசிரியர்களுக்கு பயிற்சி தரப்படுகிறது. இந்த பயிற்சி, முதுநிலை பட்டதாரி ஆசிரியர்களுக்கு, போதிய பலன் தரவில்லை. மேலும், கல்வியியல் ஆராய்ச்சி நிறுவன விரிவுரையாளர்களில் பலர், நவீன தொழில்நுட்பத்துக்கு ஏற்ப மாறவில்லை.எனவே, அரசு மற்றும் தனியார் பள்ளி ஆசிரியர்களுக்கு, துறையில் சிறந்த வல்லுனர்கள் சார்பில், பயிற்சி அளிக்கப்பட உள்ளது. 


தேசிய கல்வி நிறுவனமான, ஐ.ஐ.டி., பேராசிரியர்கள், அண்ணா பல்கலை பேராசிரியர்கள், அனுபவம் பெற்ற அறிவியலாளர்கள், நுழைவு தேர்வு வினாத்தாள் தயாரிப்பில் இடம்பெறும் ஆசிரியர்கள் ஆகியோர், சிறப்பு பயிற்சி அளிக்க உள்ளனர்.

No comments:

Post a Comment

குறிப்பு:
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விக்குயிலுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.

-அன்புடன் கல்விக்குயில்.