''அந்தந்த பள்ளிகளிலேயே, அரசு பொதுத் தேர்வு எழுதும் வகையில், தேர்வு மையம் அமைக்கப்படும்,'' என, பள்ளிக்கல்வித் துறை
அமைச்சர் செங்கோட்டை யன் தெரிவித்தார்.
பெரம்பலுாரில், மாணவ, மாணவியருக்கு நடந்த வழிகாட்டி நிகழ்ச்சியை, பள்ளிக்கல்வித் துறை அமைச்சர் செங்கோட்டையன் துவக்கி வைத்து பேசியதாவது:
இந்தியாவிற்கு வழிகாட்டியாக, தமிழக மாணவர்களை உருவாக்கும் வகையில், கல்வி தரம் மேம்படுத்தப்படும்.
மாணவர்கள் தேர்வு நேரத்தில் மையத்திற்கு செல்லும் நேரம், போக்கு
வரத்து செலவு, வீண் அலைச்சல் ஆகியவற்றை குறைப்பதற்காக, அந்தந்த பள்ளிகளிலேயே, அரசு பொதுத் தேர்வு எழுதும் வகையில், தேர்வு மையம் அமைக்கப்படும்.
மாணவ, மாணவியர் எத்தகைய போட்டித் தேர்வுகளையும் எதிர்கொள்ளும் வகையில், வினா - விடை புத்தகம் தயாரிக்கப்பட்டு, மாணவ, மாணவியருக்கு தேவையான பயிற்சியும் அளிக்கப்பட உள்ளது. மாணவ, மாணவியர் போட்டித் தேர்வுகளுக்கு முயற்சிப்பதை நிறுத்தக்கூடாது.
இவ்வாறு அவர் தெரிவித்தார்.
No comments:
Post a Comment
குறிப்பு:
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விக்குயிலுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விக்குயில்.