WELCOME

Blogger Tips and TricksLatest Tips And TricksBlogger Tricks

KK SCROLL

Sunday, September 17, 2017

19ம் தேதி விதிகள் அறிவிப்பு.

ஆசிரியர்களின் போராட்டம் வாபஸ் பெறப்பட்ட நிலையில், ௧௫ ஆயிரம் பகுதி நேர ஆசிரியர்கள் இடமாற்றம் செய்யப்பட உள்ளனர். இதற்கான விதிகள், வரும், ௧௯ம் தேதி அறிவிக்கப்பட உள்ளன.தமிழகம் முழுவதும், அரசு பள்ளிகளில், ௨௦௧௨ல், ௧௬ ஆயிரம் பேர் பகுதி நேர ஆசிரியர்களாக நியமிக்கப்பட்டனர்.தற்போது, ௧௫ ஆயிரம் பேர் மட்டுமே பணியாற்று கின்றனர்; மாதம், ௭,௨௦௦ ரூபாய் சம்பளம் வழங்கப்படுகிறது. இவர்கள், பணி 
நிரந்தரம் கோரி, பல்வேறு போராட்டங்கள் நடத்தி வந்தனர். ஆனால், பணி நிரந்தரம் செய்ய முடியாது என, அரசு கைவிரித்து விட்டது.
இந்நிலையில், பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி, அரசு பள்ளி ஆசிரியர்கள் போராட்டம் நடத்தி வந்த நிலையில், பகுதி நேர ஆசிரியர்கள், பள்ளிகளை கவனித்து 
வந்தனர். நீதிமன்ற உத்தரவை தொடர்ந்து, நேற்று ஆசிரியர்கள் போராட்டம், தற்காலிகமாக வாபஸ் ஆகி உள்ளது.இதனால், பகுதி நேர ஆசிரியர்கள், மீண்டும் வாரத்திற்கு இரண்டு நாட்கள் மட்டும், பள்ளிக்கு வந்தால் போதும் என, உத்தரவிடப்பட்டுள்ளது. 
மேலும், சிறப்பாசிரியர்கள் தேவைப்படும் பள்ளிகளுக்கு, பகுதி நேர ஆசிரியர்களை இடம் மாற்ற, தமிழக பள்ளிக்கல்வித்துறை முடிவு செய்து
உள்ளது. இதற்கான விதிகள், வரும்,௧௯ம் தேதி அறிவிக்கப்பட உள்ளன.
இதற்கிடையில்,இட மாற்றத்தின் போது, ஆசிரியர்களை நீண்ட துாரத்திற்கு மாற்றக்கூடாது என, ஆசிரியர் சங்கத்தினர் கோரியுள்ளனர்.

1 comment:

குறிப்பு:
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விக்குயிலுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.

-அன்புடன் கல்விக்குயில்.