WELCOME

Blogger Tips and TricksLatest Tips And TricksBlogger Tricks

KK SCROLL

Friday, September 15, 2017

43 ஆயிரம் ஆசிரியர்களுக்கு, 'நோட்டீஸ்' ஐகோர்ட்டில் அரசு தகவல்.


அனுமதியின்றி, 'ஆப்சென்ட்' ஆன ஆசிரியர்கள் மீது, ஒழுங்கு நடவடிக்கை எடுப்பதற்கு, 'நோட்டீஸ்' அனுப்பப்பட்டு இருப்பதாக, சென்னை உயர் நீதிமன்றத்தில், தமிழக அரசு தெரிவித்துள்ளது. 43
ஆயிரம் ஆசிரியர்களுக்கு, நோட்டீஸ் வழங்கியிருப்பதாகவும் கூறப்பட்டுள்ளது. பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி, ஜாக்டோ - ஜியோ அமைப்பு போராட்டத்தில் ஈடுபட்டு வருகிறது. போராட்டத்தில் ஈடுபடும் ஆசிரியர்களுக்கு, சென்னை உயர் நீதிமன்றம் கண்டனம் தெரிவித்தது. மேலும், தமிழக அரசிடம், 12 கேள்விகளுக்கு பதில் அளிக்கும்படியும் உத்தரவிட்டு இருந்தது. ஆறு ஆசிரியர் சங்கம் இவ்வழக்கில், அரசு தரப்பில் அளிக்கப்பட்ட பதில்: வகுப்புகளை புறக்கணித்து, ஆறு ஆசிரியர் சங்கங்கள் போராடுகின்றன. செப்., 13 வரை, 33 ஆயிரம் ஆசிரியர்கள், பணி புறக்கணிப்பு செய்துள்ளனர்.   0:00   சில சங்கங்களின் நிர்வாகிகளாக, ஓய்வுபெற்ற ஆசிரியர்கள் உள்ளனர். இந்த போராட்டத்தில், தனியார் பள்ளி ஆசிரியர்கள் கலந்து கொள்ளவில்லை.தமிழகத்தில் உள்ள அரசு பள்ளிகளில், 1.17 லட்சம் ஆசிரியர்கள் பணியாற்றுகின்றனர். மக்கள் தொகையை கணக்கிடும்போது, ஆசிரியர்களின் சதவீதம், அரை சதவீதத்திற்கும் குறைவு.மாணவர்களுடன் ஒப்பிடும்போது,25 சதவீத ஆசிரியர்கள் உள்ளனர். தமிழக அரசின் மொத்த பட்ஜெட்டில், ஆசிரியர்களின் சம்பளமாக, 700 கோடி ரூபாய் ஒதுக்கப்படுகிறது. அரசு பள்ளி ஆசிரியர்களை விட, தனியார் பள்ளி ஆசிரியர்கள் குறைந்த சம்பளத்தையே பெறுகின்றனர். அரசு ஆசிரியர்களுக்கு, கால வரைமுறை ஊதியம் வழங்கப்படுகிறது. பெரும்பாலான தனியார் பள்ளிகளில், தொகுப்பூதியம் வழங்கப்படுகிறது. ஆசிரியர் பயிற்சி பெற்றவர்கள் மற்றும் அரசு ஊழியர்கள், பெற்றோர் - ஆசிரியர் சங்க ஆசிரியர்கள் உதவியுடன், பள்ளிகளை இயக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. பணிக்கு வராத நாட்களுக்கு, சம்பளம் வழங்கப்படாது. ஒழுங்கு நடவடிக்கை பணிக்கு வராத நாட்கள்,அனுமதியின்றி பணிக்கு வராததாக கருதப்பட்டு, அவர்கள் மீது ஒழுங்கு நடவடிக்கை எடுப்பதற்கான நடவடிக்கை துவங்கப்பட்டுள்ளது.ஒழுங்குமுறை விதிகளின்படி, 43 ஆயிரம் ஆசிரியர்களுக்கு, நோட்டீஸ் அனுப்ப உத்தரவிடப்பட்டுள்ளது.இவ்வாறு பதில் மனுவில் கூறப்பட்டுள்ளது. இதையடுத்து, நீதிபதி கிருபாகரன், ''அரசு ஊழியர்கள் போராட்டம் குறித்து, இந்த நீதிமன்றம் கருத்து கூறவில்லை; ஆனால், மாணவர்களின் கல்வி பாதிக்கப்படும் என்பதால் தான், ஆசிரியர்களின் போராட்டம் குறித்து, இந்த நீதிமன்றம் கவலை கொள்கிறது. ஒரு நாள் பாடம் எடுக்கவில்லை என்றாலும், அதை ஈடுசெய்வது கடினம்,'' என்றார். அப்போது, வழக்கறிஞர் ஞானசேகரன், ''ஓய்வூதிய பலன்களை தரவில்லை என்பது, அவர்களின் முக்கிய கோரிக்கை. ஊழியர்களின் சம்பளத்தில், 10சதவீதம் பிடித்தம் செய்ய படுகிறது. அரசின் பங்களிப்பு செலுத்த பட வில்லை,'' என்றார்.அதற்கு, நீதிபதி, ''அரசு செலுத்த வேண்டிய பங்கை செலுத்தவில்லை என்றால், அது தவறானது. இந்த வழக்கை, நாளை தள்ளி வைக்கிறேன். ஓய்வூதிய சம்பள பிடித்தம் தொடர்பான தகவல்களை, நீதிமன்றத்தில் தாக்கல் செய்ய வேண்டும்,'' என்றார்.

No comments:

Post a Comment

குறிப்பு:
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விக்குயிலுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.

-அன்புடன் கல்விக்குயில்.