தேசிய அளவில் தேர்வு செய்யப்பட்ட, துாய்மையான உயர் கல்வி நிறுவனங்கள்
பட்டியலில், முதல், 25 இடங்களில், 12 இடங்களை
தமிழகத்தைச் சேர்ந்த கல்லுாரிகள் பெற்றுள்ளன.
துாய்மை இந்தியா திட்டத்தின் கீழ், 2017ம் ஆண்டுக்கான, துாய்மையான தனியார் பல்கலை, கல்லுாரி, தொழில் நுட்ப கல்வி நிறுவனங்களை, மத்திய அரசின், மத்திய மனிதவள மேம்பாட்டுத் துறை தேர்வு செய்துள்ளது. நாடு முழுவதும் இருந்து, 3,500 கல்வி நிறுவனங்கள் விண்ணப்பித்தன.
இதில், துாய்மையான, முதல், 25 உயர் கல்வி நிறுவனங்கள் பெயர் பட்டியலை, மத்திய மனிதவள மேம்பாட்டு துறை அமைச்சரும், பா.ஜ.,வைச் சேர்ந்தவருமான, பிரகாஷ் ஜாவடேகர், டில்லியில் நேற்று வெளியிட்டார். இதில், 12 இடங்களை தமிழகத்தைச் சேர்ந்த, உயர் கல்வி நிறுவனங்கள் பிடித்துள்ளன.
துாய்மையான கல்லுாரிகள் பட்டியலில், ஈரோட்டிலுள்ள, கொங்கு கலை மற்றும் அறிவியல் கல்லுாரி, முதலிடம் பிடித்தது. தொழில் நுட்ப கல்லுாரிகள் பட்டியலில், கோவை, அம்ரிதா விஷ்வா வித்யாபீடம், முதலிடம் பிடித்தது.
No comments:
Post a Comment
குறிப்பு:
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விக்குயிலுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விக்குயில்.