WELCOME

Blogger Tips and TricksLatest Tips And TricksBlogger Tricks

KK SCROLL

Friday, September 1, 2017

எல்காம் ஆங்கிலம், ஏரியல் கணிதம் 670 பள்ளிகளில் புதிய திட்டங்கள்.

தமிழகம் முழுவதும், ௬௭௦ அரசு பள்ளிகளில், மத்திய அரசின், 'எல்காம் ஆங்கிலம், ஸ்டெம் அறிவியல்' ஆகிய திட்டங்கள் அமலுக்கு வந்துள்ளன. நாடு முழுவதும் பள்ளிக்கல்வியில் தொழில்நுட்பங்களை அறிமுகம் செய்யும் வகையில், பல்வேறு திட்டங்களை மத்திய அரசு அமல்படுத்துகிறது. அனைவருக்கும் இடைநிலை கல்வி இயக்கமான, ஆர்.எம்.எஸ்.ஏ., திட்டத்தின் கீழ், மாநிலங்களுக்கு நிதி ஒதுக்கப்பட்டு, உள்கட்டமைப்பு வசதிகள் செய்யப்படுகின்றன.

இதன்படி, தமிழகத்தில், 670அரசு பள்ளிகளில், 'எல்காம் ஆங்கிலம், ஸ்டெம் அறிவியல், ஏரியல் கணிதம்' ஆகிய திட்டங்கள் அறிமுகம் செய்யப்பட்டுள்ளன.
● 'எல்காம் ஆங்கிலம்' திட்டத்தில், ஊரக பகுதி மாணவர்களுக்கு சரளமாக ஆங்கிலத்தில் எழுதவும், பேசவும் சிறப்பு பயிற்சி அளிக்கப்படும்
● 'ஸ்டெம் அறிவியல்' திட்டத்தில், அறிவியல், தொழில் நுட்பம், பொறியியல் மற்றும் கணிதம் ஆகியவற்றை இணைத்து, அரசு பள்ளி மாணவர்களுக்கு சிறப்பு பயிற்சி தரப்படும்
● இந்த திட்டத்தால், மாணவர்கள் எளிதில், பார்முலாக்கள் என்ற சூத்திரங்களையும், சமன்பாடு என்ற, ஈக்வேஷன்களையும், கற்றுக்கொள்ள முடியும்
● ஏரியல் கணிதம் திட்டத்தில், மாணவர்களுக்கு குறைந்த நேரத்தில், அதிக கணித பாடங்களை தெரிந்து கொள்ளும் வகையில், மாணவர்களுக்கு புரியும் வகையில் கற்றுத் தரப்படும் 
● இதில், கணிதத்தை விரும்பி, அதை ஆர்வமாக படிக்கும் முறையை மாணவர்களுக்கு கற்றுத் தருகின்றனர்.
இந்த மூன்று திட்டங்களுக்கும், அரசு பள்ளி ஆசிரியர்களுக்கு, சிறப்பு பயிற்சிகள் அளிக்கப்பட்டு, பொறுப்பு ஆசிரியர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர்.

No comments:

Post a Comment

குறிப்பு:
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விக்குயிலுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.

-அன்புடன் கல்விக்குயில்.