அரசு பள்ளிகளில், முதுநிலை பட்டதாரி ஆசிரியர் பணியிடத்துக்கான, முதற்கட்ட தேர்வு பட்டியல் வெளியிடப்பட்டு உள்ளது.அரசு பள்ளிகளில், முதுநிலை பட்டதாரி
ஆசிரியர் மற்றும் உடற்கல்வி இயக்குனர் நிலை - 1 பதவிகளில், 3,325 இடங்கள் காலியாக உள்ளன. இவற்றை நிரப்ப, ஆசிரியர் தேர்வு வாரியமான, டி.ஆர்.பி., சார்பில், ஜூலை, 2ல் எழுத்துத் தேர்வு நடத்தப்பட்டது.இதில், இரண்டு லட்சம் பேர் பங்கேற்றனர். அவர்களில் தேர்ச்சி பெற்றவர்களுக்கு, ஆக., 28 மற்றும் 29ல், சான்றிதழ் சரிபார்ப்பு நடந்தது. இதையடுத்து, தேர்வானவர்கள் பட்டியல் நேற்று வெளியிடப்பட்டது. இந்த விபரங்களை, trb.tn.nic.in என்ற இணையதளத்தில், தேர்வர்கள் தெரிந்து கொள்ளலாம்.
No comments:
Post a Comment
குறிப்பு:
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விக்குயிலுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விக்குயில்.