WELCOME

Blogger Tips and TricksLatest Tips And TricksBlogger Tricks

KK SCROLL

Wednesday, September 27, 2017

புத்தகம் வினியோகம்: அரசு உத்தரவு.


பள்ளி திறக்கும் நாளில், மாணவர்களுக்கு, இலவச புத்தகங்கள் வழங்கப்பட வேண்டும்' என, ஆசிரியர்கள் அறிவுறுத்தப்பட்டுஉள்ளனர். தமிழக சமச்சீர்
கல்வியில், 9ம் வகுப்பு வரையில், முதல் பருவ பாடங்கள் முடிந்து, தேர்வு நடத்தப்பட்டுள்ளது. செப்., 24௪ முதல், தேர்வு மற்றும் பண்டிகை கால விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. அக்., 3ல்,பள்ளிகள் மீண்டும் திறக்கப்படுகின்றன. இந்நிலையில், பள்ளிகளை திறந்த அன்றே மாணவர்களுக்கு, இரண்டாம் பருவ புத்தகங்களை வழங்கும் வகையில், முன் ஏற்பாடுகளை மேற்கொள்ள, தலைமை ஆசிரியர்கள் அறிவுறுத்தப்பட்டு உள்ளனர். முதல் நாள் என்பதால், அரை நாளில் விடுமுறை விடுவது, பாடங்கள் நடத்தாமல் ஆசிரியர்கள், 'ஓபி' அடிப்பது போன்ற சம்பவங்கள் நடக்கக் கூடாது; முதல் நாளே, இரண்டாம் பருவ பாடங்கள் துவங்கப்பட வேண்டும் என, கல்வித் துறை இயக்குனர்கள் எச்சரித்துள்ளனர்.

No comments:

Post a Comment

குறிப்பு:
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விக்குயிலுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.

-அன்புடன் கல்விக்குயில்.