WELCOME

Blogger Tips and TricksLatest Tips And TricksBlogger Tricks

KK SCROLL

Tuesday, September 5, 2017

நாளை முதல் அசல் ஓட்டுநர் உரிமம் கட்டாயம்: உயர்நீதிமன்றம்.

தமிழகம் முழுவதும் வாகன ஓட்டிகள் அசல் ஓட்டுநர் உரிமத்தை புதன்கிழமை (செப்.6) முதல் வைத்திருப்பது கட்டாயம் என்று சென்னை உயர் நீதிமன்றம் கூறியுள்ளது. அசல் வாகன ஓட்டுநர் உரிம கட்டாயத்தை எதிர்த்து தொடரப்பட்ட வழக்கில் தடையை நீட்டிக்க உயர் நீதிமன்றம் மறுத்து விட்டது. வாகன ஓட்டிகள் வாகனம் ஓட்டும்போது அசல் ஒட்டுநர் உரிமத்தை செப்டம்பர் 1-ஆம் தேதி முதல் கட்டாயம் வைத்திருக்க வேண்டும் என தமிழக அரசு அறிவித்தது. இதை எதிர்த்து சமூக ஆர்வலர் டிராபிக் ராமசாமி தாக்கல் செய்த பொதுநல மனு மீதான விசாரணை தலைமை நீதிபதி அடங்கிய முதல் அமர்வில் நிலுவையில் உள்ளது. இதே போல் தமிழ்நாடு லாரி உரிமையாளர்கள் சம்மேளனத்தின் தலைவரான சென்னை கொளத்தூரைச் சேர்ந்த ஆர்.சுகுமார் அசல் ஓட்டுநர் உரிமத்தை கட்டாயமாக உடன் வைத்திருக்க வேண்டுமென அரசால் பிறப்பிக்கப்பட்ட உத்தரவை அமல்படுத்த தடை விதிக்க வேண்டும் என வழக்கு தொடர்ந்திருந்தார். இந்த வழக்கை கடந்த செப்டம்பர் 1-ஆம் தேதி விசாரித்த தனி நீதிபதி எம்.துரைசாமி, அரசு அளித்த உத்தரவாதத்தை ஏற்று செப்டம்பர் 5-ஆம் தேதி (செவ்வாய்க்கிழமை) வரை வாகன ஓட்டிகளிடம் அசல் ஓட்டுநர் உரிமத்தைக் கேட்டு நிர்பந்தம் செய்யக்கூடாது என உத்தரவிட்டு, வழக்கை தலைமை நீதிபதியின் அமர்வுக்கு மாற்றி உத்தரவிட்டார். டிராபிக் ராமசாமி தொடர்ந்த பொது நல மனு மீதான வழக்கு விசாரணை தலைமை நீதிபதி இந்திரா பானர்ஜி மற்றும் நீதிபதி எம்.சுந்தர் ஆகியோர் அடங்கிய அமர்வு முன் திங்கள்கிழமை (செப்.4) விசாரணைக்கு வந்தது. அப்போது அசல் ஓட்டுநர் உரிமத்தை வாகனம் ஓட்டும்போது வாகன ஓட்டிகள் வைத்திருப்பது அவசியம் என்றும், அதனை வைத்திருப்பதில் என்ன சிரமம் உள்ளதென்றும் கேள்வியெழுப்பிய தலைமை நீதிபதி இந்த இரண்டு வழக்குகளின் விசாரணையை வரும் வெள்ளிக்கிழமைக்கு (செப்.8) ஒத்திவைத்தனர். இதனால், புதன்கிழமை (செப்.6) முதல் வாகன ஓட்டிகள் அசல் ஓட்டுநர் உரிமத்தை வைத்திருக்க வேண்டிய கட்டாயம் ஏற்பட்டுள்ளது.

No comments:

Post a Comment

குறிப்பு:
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விக்குயிலுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.

-அன்புடன் கல்விக்குயில்.