தமிழக அரசு ஊழியர்கள், ஆசிரியர்களுக்கு ஊதிய உயர்வை முதல்வர் எடப்பாடி கே.பழனிசாமி அறிவித்துள்ளார்.
ஏழாவது ஊதியக் குழுவின்
பரிந்துரையின் அடிப்படையிலான புதிய ஊதிய விகிதப்படி குறைந்தபட்ச ஊதியம் ரூ.15,700-ஆகவும் அதிகபட்ச ஊதியம் ரூ.2.25 லட்சமாகவும் நிர்ணயிக்கப்பட்டுள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.
ஏழாவது ஊதியக் குழு பரிந்துரைகளை தமிழக அரசின் அலுவலர் குழு கடந்த மாதம் 27 ஆம் தேதியன்று அரசிடம் அளித்தது. இந்தப் பரிந்துரைகளை ஏற்று, முதல்வர் எடப்பாடி கே.பழனிசாமி புதன்கிழமை வெளியிட்ட அறிவிப்புகள்:
அதிகபட்சம்-குறைந்தபட்சம்: புதிய ஊதிய உயர்வு அக்டோபர் 1-ஆம் தேதி முதல் அமல்படுத்தப்படும். இப்போதுள்ள குறைந்தபட்ச ஊதியம் ரூ.6,100 மற்றும் அதிகபட்ச ஊதியம் ரூ.77 ஆயிரம் என்ற அளவில் உள்ளது.
புதிய ஊதிய விகிதப்படி குறைந்தபட்ச ஊதியம் ரூ.15,700- ஆகவும், அதிகபட்ச ஊதியம் ரூ.2.25 லட்சமாகவும் நிர்ணயிக்கப்பட்டுள்ளது. முந்தைய ஊதியக் குழுக்களால் அரசு அலுவலர்கள், ஆசிரியர்களுக்கு அளிக்கப்பட்ட வீட்டு வாடகைப்படி உள்பட பல்வேறு படிகளுக்கான உயர்வைவிட இந்த முறை அதிகமான உயர்வு அளிக்கப்பட்டுள்ளது என்று முதல்வர் பழனிசாமி தனது அறிவிப்பில் தெரிவித்துள்ளார்.

ஓய்வூதியதாரர்களுக்கு எவ்வளவு?
அரசு ஓய்வூதியதாரர்கள், குடும்ப ஓய்வூதியதாரர்களுக்கும், மத்திய அரசு கடைப்பிடித்த அதே விகித முறையில் ஊதியத்தை உயர்த்தி அளிக்க முடிவு செய்யப்பட்டுள்ளது.
இதனால் புதிய உயர்த்தப்பட்ட ஓய்வூதியம், குடும்ப ஓய்வூதியம் என்பது குறைந்தபட்சம் ரூ.7,850-ஆக இருக்கும்.
எனினும், ஓய்வு பெற்ற அரசு அதிகாரிகளின் பணி நிலைகளுக்கு ஏற்ப அதிகபட்ச ஓய்வூதியம் ரூ. 1 லட்சத்து 12 ஆயிரத்து 500-ஆகவும் குறைந்தபட்ச ஓய்வூதியம் ரூ.67,500-ஆகவும் இருக்கும்.
ஓய்வு பெறும் போது அளிக்கப்படும் பணிக்கொடைக்கான அதிகபட்ச வரம்பு ரூ.10 லட்சத்திலிருந்து ரூ.20 லட்சமாக உயர்த்தப்படும்.
சத்துணவு பணியாளர்கள்
சத்துணவு, அங்கன்வாடி பணியாளர்கள், கிராம பஞ்சாயத்து செயலர், அனைத்துத் துறைகளில் பணியாற்றும் சிறப்பு காலமுறை ஊதியம் பெற்று வரும் பணியாளர்களுக்கு குறைந்தபட்ச ஊதியம் ரூ.3,000-மாகவும், அதிகபட்ச ஊதியம் ரூ.11,100-மாகவும் திருத்தி அமைக்கப்படும்.
ஆண்டுக்கு ரூ.14,719 கோடி செலவாகும்
தொகுப்பூதியம், நிலையான ஊதியம், மதிப்பூதியத்தில் உள்ள பணியாளர்களின் நலன்களைக் கருத்தில் கொண்டு அவர்களுக்கு குறைந்தபட்சமாக 30 சதவீத ஊதிய உயர்வு அளிக்கப்படும். இந்த முடிவுகளின் அடிப்படையில், அரசு அலுவலர், ஆசிரியர்களுக்கு ஆண்டுக்கு ரூ.8,016 கோடி கூடுதல் ஊதியமும், ஓய்வு பெற்றோர், குடும்ப ஓய்வூதியம் பெறுவோருக்கு ரூ.6,703 கோடி கூடுதல் ஓய்வூதியமும் அளிக்கப்படும்.
அரசுக்கு ஆண்டுக்கு ரூ.14,719 கோடி கூடுதல் செலவு அரசுக்கு ஏற்படும். இந்த அறிவிப்புகளால் சுமார் 12 லட்சம் அரசு அலுவலர்கள், ஆசிரியர்களும், சுமார் 7 லட்சம் ஓய்வூதியம், குடும்ப ஓய்வூதியம் பெறுவோரும் பயனடைவர்.
No comments:
Post a Comment
குறிப்பு:
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விக்குயிலுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விக்குயில்.