WELCOME

Blogger Tips and TricksLatest Tips And TricksBlogger Tricks

KK SCROLL

Thursday, October 12, 2017

பூமியை இன்று நெருங்குகிறது டிசி4 விண்கல்.


விண்வெளியில் வலம் வந்துகொண்டிருக்கும் 'டிசி4' என்ற விண்கல், பூமியை வியாழக்கிழமை (அக். 12) கடந்து செல்லவிருப்பதாக விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர். எனினும், பூமியிலிருந்து சுமார் 42,000 கி.மீ. தொலைவு
வரை வந்து செல்லவிருக்கும் இந்த விண்கல்லால் பூமிக்கு எந்தப் பாதிப்பும் ஏற்படாது என்று அவர்கள் கூறியுள்ளனர். இதுகுறித்து தகவல்கள் தெரிவிப்பதாவது: சுமார் 15 முதல் 30 மீட்டர் வரை அகலம் கொண்ட விண்கல் ஒன்று, விண்வெளியில் சுற்றிவருவதை விஞ்ஞானிகள் கண்டறிந்துள்ளனர். டிசி4 என்று பெயரிடப்பட்டுள்ள அந்த விண்கல், 2012-ஆம் ஆண்டின் அக்டோபர் மாதம், 12-ஆம் தேதி அன்டார்டிகா கண்டத்துக்கு மிக நெருக்கத்தில் கடந்து சென்றது. இந்த நிலையில், அந்த விண்கல் மீண்டும் 2017-ஆம் ஆண்டு பூமியை நெருங்கும் என்று விண்வெளி ஆய்வாளர்கள் கணித்துக் கூறியிருந்தனர். அதன்படி, டிசி4 விண்கல் பூமியை வியாழக்கிழை (அக். 12) மிக நெருக்கத்தில் கடந்து செல்கிறது. எனினும், 42,000 கி.மீ. தொலைவிலேயே அந்த விண்கல் பூமியைக் கடந்துவிடுவதால், அது பூமியுடன் மோதும் ஆபத்து இல்லை என்று விஞ்ஞானிகள் கூறியுள்ளனர். மேலும், விண்கற்களால் பூமிக்கு ஆபத்து நேரிடும் சூழலில், அதனைத் தடுப்பதற்காக ஏற்படுத்தப்பட்டுள்ள பாதுகாப்புக் கருவிகள் மற்றும் அமைப்புகள் எவ்வாறு செயல்படுகின்றன என்பதைத் தெரிந்துகொள்வதற்கு, இந்த டிசி4 விண்கல்லின் வருகை உதவும் என்று கூறப்படுகிறது. தற்போதுள்ள நிலவரப்படி, இன்னும் 100 ஆண்டுகளுக்கு விண்கற்களால் பூமிக்கு எந்த ஆபத்தும் இல்லை என்று விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர்.

No comments:

Post a Comment

குறிப்பு:
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விக்குயிலுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.

-அன்புடன் கல்விக்குயில்.