WELCOME

Blogger Tips and TricksLatest Tips And TricksBlogger Tricks

KK SCROLL

Friday, October 13, 2017

ஆசிரியர் தகுதித் தேர்வில் வெயிட்டேஜ் மதிப்பெண் முறையை நீக்க ஓரிரு நாளில் குழு.


ஆசிரியர் தகுதித் தேர்வில் வெயிட்டேஜ் மதிப்பெண் முறையை நீக்க ஓரிரு நாளில் குழு அமைக்கப்படும் என்றார் பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் கே.ஏ. செங்கோட்டையன். கரூரில் இதுகுறித்து அவர்
வியாழக்கிழமை மேலும் கூறியது: மேலை நாடுகளின் கல்வி முறையை கற்றுக்கொள்ளும் வகையில் 100 தமிழக மாணவர்களை அனுப்ப ஏற்பாடு செய்துள்ளோம். மத்திய அரசின் எத்தகைய தேர்வாக இருந்தாலும் அதைத் நம் மாணவர்கள் எதிர்கொள்ளும் வகையில் 412 பயிற்சி மையங்களை வரும் நவம்பருக்குள் அமைக்க உள்ளோம். இந்த மையங்களில் பணிபுரிய சிறப்பு பயிற்சி பெற 54 ஆசிரியர்களை ஹைதராபாத் அனுப்பியுள்ளோம். அவர்கள் தமிழகம் திரும்பியவுடன் 3000 ஆசிரியர்களுக்குப் பயிற்சியளிக்க, அவர்கள் பிளஸ்-2 மாணவர்களுக்கு பயிற்சியளிப்பர். இந்த சிறப்புப் பயிற்சியில் மாணவர்கள் சேர ஒன்றியத்துக்கு ஒரு விண்ணப்பம் வழங்கி பின்னர் அவர்களுக்கான பயிற்சிகள் தொடங்கப்படும். கரூர் மாவட்டத்தில் சில பள்ளிகளில் என்சிசி அமைப்புகள் இல்லையெனக் கூறப்பட்டுள்ளது. அனைத்து அரசுப் பள்ளிகளிலும் என்சிசி அமைப்புகள் கொண்டு வரப்படும். ஆசிரியர் தகுதித் தேர்வில் வெயிட்டேஜ் மதிப்பெண் முறையை நீக்க ஒரிரு நாட்களில் குழு அமைக்கப்படும். அந்தக் குழு அளிக்கும் அறிக்கைக்கேற்ப 15 நாட்களில் நடவடிக்கை எடுக்கப்படும். 2013-ல் ஆசிரியர் தகுதித்தேர்வில் வெயிட்டேஜ் மதிப்பெண் முறையில் பாதிக்கப்பட்டோர் குறித்து தமிழக அரசு கவனத்தில் கொள்ளும். நவம்பர் மாதத்திற்குள் 3000 பள்ளிகளில் ஸ்மார்ட் வகுப்புகள் தொடங்கப்படும். 9 முதல் பிளஸ்-2 வகுப்பு வரை அனைத்து வகுப்புகளும் கணினிமயமாக்கப்படும். இனி பிளஸ்-1 வகுப்பு தொடங்கும்போதே மடிக்கணினி வழங்க நடவடிக்கை எடுக்கப்படும். அரசுப் பள்ளிகளில் சிறந்து விளங்கும் 920 பிளஸ்-1, பிளஸ்-2 மாணவர்களைத் தேர்வு செய்து அவர்களுக்கு பரிசுத் தொகை வழங்கப்பட உள்ளது என்றார் அமைச்சர். போக்குவரத்துத் துறை அமைச்சர் எம்ஆர். விஜயபாஸ்கர், பள்ளி கல்வித் துறை முதன்மைச் செயலர் பிரதீப்யாதவ், கிருஷ்ணராயபுரம் எம்எல்ஏ எம். கீதாமணிவண்ணன் உள்ளிட்டோர் உடனிருந்தனர்.

No comments:

Post a Comment

குறிப்பு:
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விக்குயிலுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.

-அன்புடன் கல்விக்குயில்.