Wednesday, October 11, 2017
7-ம் வகுப்பு மாணவர்களுக்கு வழங்கப்பட்ட கேள்வித்தாளில் காஷ்மீர் தனிநாடு என தகவல்.
பீகார் மாநிலத்தில் 7-ம் வகுப்பு மாணவர்களுக்கு தேர்வின் போது வழங்கப்பட்ட கேள்வித்தாளில் காஷ்மீர் தனிநாடு என குறிப்பிடப்பட்டு இருந்தது சர்ச்சையாகி உள்ளது. இருப்பினும் அம்மாநில கல்வித்துறை பிரிண்டிங் தவறு என குறிப்பிட்டு உள்ளது.
7-ம் வகுப்பு மாணவர்களுக்கு வழங்கப்பட்ட கேள்வித்தாளில் கீழ்க்கண்ட நாடுகளை சேர்ந்த மக்கள் எவ்வாறு அழைக்கப்படுகிறார்கள்? என கேள்வியுடன் சரியான பதிலை தேர்வு செய்யுங்கள் என சீனா, நேபாளம், இங்கிலாந்து, காஷ்மீர் மற்றும் இந்தியா என குறிப்பிடப்பட்டு உள்ளது. பீகார் மாநில கல்வித்துறை திட்ட கவுன்சில் அதிகாரி சஞ்சய் குமார் சிங், விடுபட்ட வார்த்தையின் காரணமாக இந்த தவறு நேரிட்டு உள்ளது என கூறிஉள்ளார்.
“உண்மையான கேள்வி கீழ்க்கண்ட நாடுகள் மற்றும் மாநிலங்களை சேர்ந்த மக்கள் எவ்வாறு அழைக்கப்படுகின்றனர் என்பதுதான். இதுவே மாணவர்களுக்கு வழங்கப்பட்ட புத்தகத்தில் உள்ள கேள்வியாகும், உண்மையான கேள்வியாகும். எப்படியோ மாணவர்களுக்கு தேர்வின் போது வழங்கப்பட்ட கேள்வித்தாளில் மாநிலங்கள் என்ற வார்த்தையானது விடுபட்டு உள்ளது. அதனை யாரும் பார்க்கவும் இல்லை. இருப்பினும் இது நடந்து இருக்க கூடாது,” என அவர் குறிப்பிட்டு உள்ளார். கேள்வித்தாள்கள் தயார் செய்யப்பட்டு பல்வேறு இடங்களில் பிரிண்டிங் செய்யப்பட்டு உள்ளது என தெரிவிக்கப்பட்டு உள்ளது.
மற்றொரு அதிகாரி பேசுகையில் இது மிகவும் சங்கடமான சம்பவம் என்பதை ஒத்துக்கொள்கிறோம் என கூறிஉள்ளார்.
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment
குறிப்பு:
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விக்குயிலுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விக்குயில்.